அண்மைய செய்திகள்

recent
-

இருமல், சளித்தொல்லைக்கு தீர்வு: வீட்டிலேயே மருந்து .....


உணவில் சுவைக்காகவும், மணத்துக்காகவும் பயன்படுத்தப்படும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
காய்ந்த நிலையில் இருக்கும் இஞ்சியே சுக்கு என்கிறோம், இருமல், சளி போன்றவற்றிற்கு சுக்கு தீர்வாகிறது.

டீ, காபிக்கு பதிலாக சுக்குமல்லி டீ அருந்துவது பல உடல் உபாதைகளுக்கு மருந்தாகும்.
சாப்பாடு, தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால் சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு ஏற்படும்.
இன்னும் சிலருக்கு நெஞ்சுப்பகுதியை உள்ளுக்குள் அழுத்துவது போன்ற உணர்வு, புளியேப்பம் ஏற்படும்.
அந்தச் சமயங்களில் சுக்குமல்லி டீ குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
சுக்கு மல்லி டீ தயாரிக்கும் முறை
சுக்கு- 1/2 கப், மல்லி- 1/4 கப், மிளகு- 1/2 டீஸ்பூன், சீரகம்- 1/2 டீஸ்பூன். இவை அனைத்தையும் தனிதனியாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், 2 டீஸ்பூன் சுக்கு மல்லி பொடியை போட்டு, பனங்கற்கண்டு சேர்த்தால் டீ தயார், பனங்கற்கண்டுக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்கள்
  • மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
  • வயிற்று பிரச்சனைகள் நீங்கும்.
  • பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
  • தலைவலி இருக்கும் போது சுக்குப் பொடியை பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும்.
  • இருமல், சளி மற்றும் மூக்கு ஒழுகல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வாகிறது.
  • தினமும் இதை குடித்து வந்தால் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
இருமல், சளித்தொல்லைக்கு தீர்வு: வீட்டிலேயே மருந்து ..... Reviewed by Author on July 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.