அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் நடமாடும் சேவை...


வடக்கில் கல்வியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் தாபன நிர்வாக அலுவலகக் குறைகளைக் களைந்து கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடமாடும் சேவை மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நடமாடும் சேவை வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று 19-07-2018 மாலை மன்னார் வலயக்கல்வி பணிமனையில் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளான சுயவிபரக் கோவைகள் பூர்த்தி,சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள், விதவைகள் அநாதைகள் ஓய்வு ஊதிய இலக்கம், ஆசிரியர் பதிவு இலக்கம், கற்கை விடுமுறைகள், சம்பளமற்ற விடுமுறைகள், வெளிநாட்டு விடுமுறைகள், பிரசவ விடுமுறைகள், பிரமாணக் குறிப்பின் படி உள்ளீர்ப்பும் நியமனமும், பொருத்தமான நேரசூசியின்மை, ஏனைய நிர்வாகம், பாடசாலை சார்ந்த பிரச்சினைகள், ஆசிரியர் விடுதிகள், பாடசாலையின் அடிப்படைத் தேவைகள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் வகையில் நடமாடும் சேவை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் வருகை தந்து பயனடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்து.

இதன்போது, வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மன்னாரில் கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையில் நடமாடும் சேவை... Reviewed by Author on July 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.