அண்மைய செய்திகள்

recent
-

பூண்டுல அப்படி என்ன அற்புதம் இருக்கு.....


ஒற்றைப்பல் பூண்டு இது பூண்டின் ஒரு வகையாகும்.
பொதுவாக பூண்டு பல பற்கள் அடங்கிய கொத்து போல் இருக்கும்.
இந்த வகை பூண்டில் தாமாரை இதழ் போல் ஒரே ஒரு பூண்டு பல் தான் மொத்த பூண்டின் உருவில் இருக்கும். ஆனால், பூண்டின் தோலை உரித்து பார்க்கும்போது, மொத்தமாக ஒரே ஒரு பல் தான் இருக்கும்.
இதனை ஹிமாலயன் பூண்டு என்றும் கூறுவர். சாதாரண பூண்டை விட ஏழு மடங்கு அதிக சக்தி கொண்டது. பல நோய்களில் இருந்து அடியோடு அழிக்க வல்லது. இந்த இதிக சக்தி கொண்ட பூண்டின் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
  • தினமும் மூன்று அல்லது நான்கு பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
  • சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது. இரண்டு பூண்டை நசுக்கி ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகிவதால் சளி மற்றும் இருமல் குணமடைகிறது.
  • தினமும் பூண்டு சாப்பிடுவதால் புற்று நோய்க்கான அபாயத்தையும் 50% வரை குறைக்கின்றது..
  • பூண்டில் உள்ள அல்லிசின் , வைட்டமின் பி மற்றும் தைமின் போன்றவற்றோடு இணைந்து கணயத்தை ஊக்குவித்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் நீழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • தினமும் ஹிமாலயன் பூண்டு பற்கள் இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவி புரிகின்றது.
  • நோயாளிகள் தினமும் பூண்டு உட்கொள்வதால் தீங்கு விளைவிக்கும் இரத்த உறைவு ஏற்படுவது 83% குறைக்கப்படுகின்றது.
  • பூண்டில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடு என்னும் கூறு உள்ளதால் இதனால் உடலில் உள்ள சிஸ்டாலிக் மற்றும் டையஸ்லாடிக் இரத்த அழுத்தம் குறைகிறது .
  • உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் ஹிமாலயன் பூண்டை உட்கொள்வதால், தசைகள் நெகிழ்ந்து இரத்த அழுத்த அளவு குறைக்கப்படுகிறது.

பூண்டுல அப்படி என்ன அற்புதம் இருக்கு..... Reviewed by Author on July 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.