அண்மைய செய்திகள்

recent
-

சவுதி அரேபியாவில் இனி உணவை வீணடித்தால் கடும் அபராதம் -


சவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 விழுக்காடு வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் உணவு பண்டங்களை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே இனி சவுதி அரேபியாவில் வீண்டிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த சட்டமானது உணவு பதப்படுத்தும் நிலையம், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சட்டத்தை மீறும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் வேளாண் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சவுதி அரேபியாவில் இனி உணவை வீணடித்தால் கடும் அபராதம் - Reviewed by Author on July 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.