அண்மைய செய்திகள்

recent
-

18,500 அரசு அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்த துருக்கி: காரணம் என்ன? -


துருக்கியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும், 18,500 அரசு அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து அந்நாட்டு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
துருக்கி நாட்டில் ராணுவத்தில் ஒரு பிரிவினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உருவாகி இருந்த அந்த புரட்சியானது, மக்களின் உதவியோடு முறியடிக்கப்பட்டது.

அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தூண்டியவர் என்று துருக்கி கூறி வரும் மதகுரு பெதுல்லா குலெனின் ஆதரவாளர்கள் என்று ஏற்கனவே ராணுவம், காவல்துறை, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வந்தவர்களில், சுமார் 50,000 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, 1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8,998 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 6,152 ராணுவ அதிகாரிகள் உட்பட 18,500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை துருக்கி அரசு இன்று தனது அரசிதழில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 2வது முறையாக துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகன், திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, முன்பு இருந்ததை விட அதிகப்படியான அதிகாரங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

18,500 அரசு அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்த துருக்கி: காரணம் என்ன? - Reviewed by Author on July 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.