அண்மைய செய்திகள்

recent
-

சிறந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டி இதுதான்: பிபா தலைவர் -


இதுவரை நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில், ரஷ்ய உலகக் கிண்ண போட்டியே சிறந்தது என பிபா தலைவர் ஜியானி இன்பாண்டினோ தெரிவித்துள்ளார்.
ரஷ்ய உலகக் கிண்ண கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் நாளை மோத உள்ளன.

அதற்கு முன்பாக, மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA-வின் தலைவர் ஜியானி இன்பாண்டினோ, மாஸ்கோவில் நேற்று அளித்த பேட்டியில் இது தான் சிறந்த உலகக் கிண்ண தொடர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதுவரை நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று என்னால் உறுதியாக கூற முடியும். உயர்தரமான இந்த போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் கால்பந்து ஆட்டத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை களைந்து இருக்கிறது. நடுவர்கள் சரியான முடிவை எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

V.A.R முறை அமல்படுத்தியதன் மூலம் Off-Side கோல் அனுமதிக்கப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போட்டியை நேரில் காண ஏறக்குறைய 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் ரஷ்யா வந்துள்ளனர்.
உலகம் முழுவதும் இந்த போட்டியை 300 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு களித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

சிறந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டி இதுதான்: பிபா தலைவர் - Reviewed by Author on July 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.