அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீண்டும்.....பேரூந்து ஆசனங்களில் கருவாடு-முருங்கை மூட்டைகள்- பயணிகள் மூட்டைகளாய்….


மன்னார் மாவட்டத்தில் மீண்டும் பேரூந்துகளில் நடக்கும் கொடுமை அதிகரித்துள்ளது மக்கள் முறைப்பாடு செய்தும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் ஏன் இந்த பாராமுகம்.....

மக்களின் பாதுகாப்பானதும் சுகமானதும் இலகுவானதுமான பயணத்திற்குதான் போக்குவரத்துப்பேரூந்துகள் உள்ளது ஆனாலும் எல்லாப்பேரூந்துகளும் மக்களுக்கான சேவையாக கருதாமல் பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயற்படுவதாக பயணிகள் கவலையினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பயணம் என்பது அவசியமானதாக இருக்கின்ற போது அதற்கான பணத்தினைப்பெறுகின்ற பேரூந்துகளின் நடத்துனர் ஓட்டுனர் நிர்வாகத்தினர் பயணிகளிடம் இருந்துபெறும் பணத்திற்கு ஏற்றாப்போல் இருக்கையினையும் இதரவசதிகளையும் வழங்க வேண்டாமா….???

மக்கள் இருக்கும் இருக்கைகளில்.........

  • கருவாட்டு மூட்டைகள் பெட்டிகள்
  • முருங்கை காய் மூட்டைகள் பெட்டிகள்
  • இதர பெரிய பொதிகள் பெட்களினை அதிகமாக ஏற்றுதல்
  • இருக்கைக்கு கீழே கம்பிகள் குழல்கள் பொருட்கள் என்பதினையும் ஏற்றுகின்றார்கள் இதனால் பயணிகளின் பயணத்தின் போது இவ்வாறான பொருட்களில் இருந்து வெளியேறும் ஒரு வகையான மணத்தினாலும் நெரிசலினாலும் ஏற்படுகின்ற அசௌகரியங்கள் சொல்ல முடியாது.
அதுவும் தூரப்பயணங்கள் கொழும்பு-வவுனியா-யாழ்ப்பாணம்-முல்லைத்தீவு-திருகோணமலை-மட்டக்களப்பு செல்லுகின்ற போது நின்றவாறே பயணிக்க முடியுமா….??? கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்….!

இவ்வாறான தூரப்பயணங்கள் செல்பவர்கள் முன்கூட்டியே ஆசனப்பதிவுகளை மேலதிக கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்ட போதும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களை பேரூந்து நடத்துனர் தனக்கு தெரிந்தவர்களுக்கு தன்விருப்பத்திற்கு ஏற்றால் போல் வழங்குவது எந்த வகையில் சரியாகும் சொல்லுங்கள்…!

அதெப்படி ஒரு ஆசனத்தினை இருவருக்கு கட்டணம் பெற்று பற்றுசீட்டு கொடுக்கலாம்…அப்படியானால் நிர்வாகம் பிழையா…??
இதுமட்டுமா….. முன்பக்கம் உள்ள ஆசனங்கள் எல்லாம் பழைய தலகாணி பெற்சீட் பைகள் கொண்டு பிடித்து வைக்கின்றார்கள் இது Ceat Booking என்று சொல்கின்றார்கள் அரைவாசி தூரம் வரை அந்த ஆசனங்கள் வெறுமையாகதான் இருக்கும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முடிவே இல்லையா…???

இன்னும் எத்தனை கொடுமைகள்---
  • அதிக சத்தத்தில் ஒலிக்கும் பாடல்கள்
  • ஒரு வகையான சினிமாப்பாடல்கள்
  • தகாத வார்த்தை சொற்பிரயோகம் கொண்ட சினிமாப்படங்கள்
  • தடுக்க முடியாமல் இருக்கும் உரசல்களும் சேட்டைகளும்
  • யன்னல்கள் போடும் சத்தம் கிழிந்த ஆடும் இருக்கைகள்-இரைச்சல்
  • மீதி பணம் கொடுப்பதில்லை(பயணிகளும் சில்லறை வைத்திருக்க வேண்டும்)
  • இறக்க வேண்டி இடத்தில் இறக்குவதில்லை-
  • போட்டி போட்டுக்கொண்டு ஓடும் பேரூந்துகள் முதியவர்களும் பெண்களும் நோயாளர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்தல்(தற்போது விபத்துக்கள் அதிகம்)
இவ்வாறான சம்பவங்கள் தொட்ர்கதையாக இருக்கின்றது...
யாழ்ப்பாணம் கொழும்பு-மட்டக்களப்பு-திருகோணமலை செல்லும் அரசமற்றும் தனியார்பேரூந்துகள் பயணங்களின் போது இடையில் சாப்பாட்டுக்கு நிற்பாட்டும் சாப்பாட்டுக்கடைகள் தங்களுக்கு வசதியாகத்தான் பாரக்கின்றார்கள் தவிர பயணிகள் எல்லோருக்கும் பொதுவான சாப்பாட்டுக்கடைகளில் நிற்பாட்டுவதில்லை........

இவ்வாறு நிற்பாட்டினாலும் தாங்கள் சாப்பிட்டவுடன் புறப்படுதல் ஒரு சில பயணிகள் பேரூந்தினை தவறவிடுகின்றனர்(ஒருவர் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளாமல் வேலை இழந்த சந்தர்ப்பமும் உண்டு)இப்படி இன்னும் எத்தனையோ......
தூரப்பயணங்களின் போது பேரூந்துகள் இடையில் இயந்திரக்கோளாறு காரணமாக இடையில் நிற்றல் ஏன்......

இவ்வாறாக இன்னும் பயணிகள் மக்கள் படும் துயரங்கள் அதிகமாகவே உள்ளது இவைகளை அறிந்தும் அறியாது போல பணத்தினை மட்டும் இலக்காக கொண்டு செயற்படும் அரசம மற்றும் தனியார்பேரூந்துகள் அதன் நிர்வாகத்தினருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்ன வென்றால் பணம் வாழ்க்கைக்கு தேவை அதற்காக மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை விட்டு நல்மனத்துடன் செயற்பட முன்வாருங்கள்…

அரச அதிகாரிகளே அரசியல் வாதிகளே சம்மந்தப்பட்டஅதிகாரிகளே மக்கள் முன்வைத்திருக்கும் இந்த முறைப்பாட்டுக்கு தங்கிளின் ஆக்கபுர்வமான பதில் என்ன….

தீர்வு என்ன…. தீர்வு என்ன….தீர்வு என்ன…

 -மன்னார்விழி-
 







மன்னாரில் மீண்டும்.....பேரூந்து ஆசனங்களில் கருவாடு-முருங்கை மூட்டைகள்- பயணிகள் மூட்டைகளாய்…. Reviewed by Author on August 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.