அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வழமைபோல் தீர்மானங்கள் நிறைவேற்றம் -முழுமையானஅறிக்கையுடன்


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன் , பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 06-08-2018 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன்,வடக்கு அமைச்சர்களான ஜீ.குணசீலன், கந்தையா சிவநேசன் , மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப், பிரதேசச் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் , பொலிஸ் கடற்படை உயர் அதிகாரிகள், மீனவ, விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை உடனடியாக இராணுவம் கூட்டுறவு திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணி இராணுவத்தின் வசம் இருக்கின்றது. எனவே உடனடியாக மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட வேண்டும். எனினும் இவ்விடயம் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு இராணுவ அதிகாரி வருகை தராத நிலையில் பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன், மன்னார் மாவட்டத்தில்
  • மீன்பிடி-(பேசாலை-ஊசிமுந்தல்-தாழ்புபாடு-பள்ளிமுனை) மீன்பாடு பிரச்ச்னையும் இறங்குதுறை அமைத்தல் பிரச்சினையும்.

  • சுகாதாரம்-வைத்தியர் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளுடன் நட்புறவுடன் கவனித்தல்
போக்குவரத்து-அரசபேரூந்து ஊழியர்கள் தங்குவதற்கான கட்டிடம் மற்றும் நடத்துனர்,ஓட்டுனர் பேரூந்துகள் குறைவு தொடர்பாகவும் போக்குவரத்து.

  • குடி நீர்-மன்னார் மன்ணிய் குடிநீர் தட்டுப்பாடு இன்னும்  10 வருடங்களில் வர வாய்ப்பு உள்ளது காரணம் மழையின்மையால் விவசாயிகள் குழாய்க்கிணறுகள் அதிகமாக சுமார்- 5000 அடிக்கப்பட்டுள்ளாதால் பாவனையால் நிலத்தடி நீருடன் உப்புக்கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படும் குழாய்க்கிணறுகளுக்கு தடைவிதிப்பும் மேலதிக செயற்பாடும்.

  • விவசாயம், கால்நடை வளர்ப்பு -மழையின்மையும் வறட்ச்சியும் காரணமாக விவசாயிகள் பாதிப்பு அவர்களூக்கான நிவாரணங்களுக்கான பரிந்துரையும் கடன் கொடுப்பனவும் வழங்கள்.
  •  கடற்தொழில்-காற்றுக்காரணமாக தொழில்வாய்ப்பின்மைஅவர்களூக்கான நிவாரணங்களுக்கான பரிந்துரையும்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அடையாளம் காணப்பட்ட குளங்கள் புனரமைப்பு, மீன்பிடி மணல் தீடைகளுக்கான எல்லைக்கட்டுப்பாடு, வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் காணிகள் எல்லையிடுதல், முள்ளிக்குளம் காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பி வீட்டுத்திட்டம் கிடைக்காத அனைத்து மக்களுக்கும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் உள்ளக குடி நீர் வசதியை பெற்றுக்கொள்ளாத கிராம மக்களுக்கும் குறித்த வசதிகளை உடன் எற்படுத்திக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மக்களின் காணிகளில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைகள் போடப்பட்டுள்ளமை குறித்தும், அதிகலவான எல்லைகளை அகற்றுவதற்கும் அறிவுறுத்தல்கள்வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்திப்பணிகள் பாரிய அளவில் நடப்தாக தோற்றப்பாடுதான் உள்ளதே தவிர முழுமையான செயற்பாடுகள் என்பது இல்லை என்பதே உண்மையான விடையமாகவுள்ளது.

இதுவரை எந்த திட்டமும் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டு மக்களின் பாவனைக்கு விடப்பட்டாலும் அத்திட்டம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றாதா என்றால்....????

அதிகாரிகளுக்கிடையே உள்ள ஒற்றுமையின்மையும் தெளிவின்மையும் போதிய தொடர்பாலின்மையும்  பொறுப்பின்மையும் தான் காரணம் அதுவரை  இப்படியேதான் தொடரும் அபிவிருத்தி.....

















































































































மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வழமைபோல் தீர்மானங்கள் நிறைவேற்றம் -முழுமையானஅறிக்கையுடன் Reviewed by Author on August 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.