அண்மைய செய்திகள்

recent
-

முதல் தேர்வில் முழுமதிப்பெண் பெற்ற 96 வயது மாணவி


கேரளாவின் ஆலப்புழா பகுதியில் வசித்து வரும் மூத்த மாணவியாக, 96 வயது கார்த்தியாயினி அம்மா திகழ்கிறார். இவர் கேரளாவில் முதியவர்கள் கல்வியறிவு பெறும் திட்டம் ஒன்றின் கீழ், பள்ளியில் படித்து வருகிறார். கடந்த ஆறுமாதங்களாக இவர் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சதி என்ற ஆசியரியர் கல்வி கற்பித்து வருகிறார். இவர் கார்த்தியாயினி அம்மா வீட்டிற்கு அருகில் இருப்பதால், அவரது வீட்டிற்கே வந்து சதி பாடம் கற்பிக்கிறார். அவருடம் மற்ற சில முதியவர்களும் பாடம் கற்கின்றனர். அவர்களும் 4ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த முதிய மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், வாசிப்பிற்கு 30 மதிப்பெண்களும், மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண்களும், கணக்கு பாடத்திற்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் வாசிப்பு பகுதியில் 30/30 என கார்த்தியாயினி அம்மாள் முழுமதிப்பெண் பெற்றார். மற்ற இரண்டு பாடங்களில் அவர் பெற்ற மதிப்பெண்கள், விடைத்தாள் திருத்தத்திற்குப் பிறகு தெரியவரும். இதுவே அவர் தன் வாழ்வில் எழுதிய முதல் தேர்வு ஆகும்.
இதுதொடர்பாக பேசியுள்ள கார்த்தியாணி அம்மாள், தான் படித்தது முழுமையாக கேள்வித்தாளில் கேட்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் இதைத்தொடர்ந்து தான் ஆங்கிலம் கற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதல் தேர்வில் முழுமதிப்பெண் பெற்ற 96 வயது மாணவி Reviewed by Author on August 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.