அண்மைய செய்திகள்

recent
-

ஊர் பேர் கேட்டாலே கொன்று திங்கும் ஆதிவாசிகள்! சோழர்களின் பாதுகாவலர்களா???


வெறும் ஐநூறுக்கும் குறைவான மக்கள் தொகை, உடலைத் துளைத்து வெளியேறும் வில் அம்புகள், குளந்தை போன்ற முக அமைப்பு இருந்தாலும், அவர்களின் விரிந்த கண்கள் எப்பேர்ப்பட்ட பகில்வானையும் தொடை நடுங்க வைத்து விடும். ஆம், இவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த நாடும் கதி கலங்கிவிடும். அப்படி யார் இவர்கள் ? சோழர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ?.
 
உயிர் கொல்லித் தீவு இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர். இப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் 572 தீவுகள் உள்ளபோதும், அவற்றில் 36 தீவுகளில்தான் மக்கள் வசித்து வருகிறார்கள். அவற்றுள் ஒன்று தான் இந்த உயிர் கொல்லித் தீவும்.

இத்தீவின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது ?. ஊர் பேர் கேட்க கிட்ட நெருங்கினாலே உயிரைக் கொண்டு உணவாக உண்டு விடுவர் இங்கு வசிக்கும் ஆதிவாசிகள். குட்டித் தீவு வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 30 கிலோ மீட்டர் சுற்றளவில் ஓர் சிறிய தீவு உள்ளது. செயற்கையான மற்றும் நவீனத் தன்மை அற்ற இத்தீவின் பெரும்பகுதி காடுகளே. இத்தீவைச் சுற்றி உள்ள கடற்கரைப் பகுதியில் கூட வேற்றுப் பகுதி மக்கள் கால் வைக்க நினைத்தால் அவர்கள் மரணிக்கப்படுவது உறுதி. அனுமதி இல்லை இத்தீவைச் சுற்றியுள்ள சுமார் மூன்று மலை தூரத்திற்குக் கூட யாரும் செல்லக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காரணம், இப்பகுதியில் வசிக்கும் மக்களால் கொலை செய்யப்படுவதே. இவர்கள் வெளி மக்களை அவர்களின் தீவில் காலடி வைக்க அனுமதிப்பதில்லை.
 
மீறி வந்தவர்கள் உடலின் மிச்சம் மீதியே வெளியேறும். Fæ ஜாரவா ஆதிவாசிகள் ஜாரவா ஆதிவாசி மக்கள் இந்த நிலம் தங்களுக்கானது எனக் கருதுகிறார்கள். இவர்களுக்கு வெளியுலகில் உள்ள நவீன சட்டதிட்டங்கள் குறித்து ஏதும் தெரியாது. எந்த விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அவர்கள் கட்டுப்படுவது இல்லை. அந்தமானின் தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வசிப்பவர்கள். ஆக்ரோசமானவர்கள் என்பதால் இவர்களின் இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இவர்களின் எண்ணிக்கை சராசரியாக 471 அளவிலேயே உள்ளது.

Foto Serra ஆங்கிலேயர்களால் பாதிப்பு கடந்த நூற்றாண்டுகளில் அந்தமான் நிலப்பரப்பை ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் தங்களது தேவைக்காக இம்மக்களை அடிபனிய வைக்க முயன்றனர். ஆனால், எதற்கும் அஞ்சாத ஜாரவா இன மக்கள் கட்டுப்பாடின்றி செயல்பட்டதால் ஆங்கிலேயர்களால் வெகுவாக கொல்லப்பட்டனர்.
 
Fæ என்ன பேசுராங்க ? இந்த தீவில் வசிக்கும் மக்களின் பேச்சு, மொழி அருகில் உள்ள தீவு மக்களுக்கே புரிவதில்லை என்கின்றனர். ஆப்பிரிக்காவில் காணப்படும் ஆதிவாசிகள் போல தோற்றம் கொண்ட இவர்களின் உண்மையான தோற்றம் தான் எது ?. எங்கிருந்து வந்தார்கள் ? இவர்களின் அன்றாட வேலை தான் என்ன என யாருக்குமே தெரியாது. Rod Waddington கற்கால மனிதர்கள் இந்த கற்கால மனிதர்கள் தீவில் வேட்டையாடி மட்டுமே உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
 
 ஏதேனும் உதவி செய்யலாம் என நெருங்கிச் சென்றால் பின் உங்களது குடும்பத்திற்கு நிதிவுதவி அளிக்க வேண்டி வரும். அத்தகைய குணம் கொண்டவர்கள் தான் இவர்கள். Rod Waddington

நேர்த்தியான கட்டமைப்பாளர்கள்
 
வெளிப் பகுதிகளில் இருந்து எந்த உதவியையும், பொருளையும் எதிர்பார்க்காத இம்மக்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்வதிலும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு உதாரணம் இவர்கள் செய்யும் வில், அம்பு, படகுகளே. தங்களது நேர்த்தியான கைவண்ணம் மூலம் உருவாக்கும் வில் பல மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கையும் எளிதில் துளைத்து வெளியேறும் அளவிற்கு கடிணமானதாக உள்ளது. Rod Waddington கூகுலில் இத்தீவு இத்தீவை நெருக்கமாக படபெடுக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மட்டுமே எடுக்க முடியும். அல்லது, கூகுல் மேப் உதவியுடன் தான் இத்தீவின் அழகையும், கடற்கரை அழகையும் ரசிக்க முடியும். கூகுலில் இதன் பெயர் வடக்கு வென்டினல் என குறிப்பிட்டிருக்கும்.
 
ஒரு சில வருடங்களுக்கு முன்பு இத்தீவின் மணல் திட்டில் மாட்டிக் கொண்ட கப்பலை இன்றும் கூகுல் மேப் வழியாக பார்க்க முடியும். கப்பளில் இருந்தவர்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு எலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது தனிக் கதை. Matthiasb

தஞ்சைக் கல்வெட்டில் ஜாரவா
ஆதிவாசிகள் அந்தமானுக்கு உட்பட்ட தீவுகள் குறித்தும், அங்கு வசிக்கும் ஆதி மனிதர்கள் குறித்தும் தஞ்சைக் கல்வெட்டில் நக்காவரம் என குறிப்பிடப்பட்டுள்ளத. நக்காவரம் என்றால் நிர்வாணம் என பொருள். அந்தமான் பகுதியில் முன்பு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் குறித்தம், தற்போது இந்தத் தீவில் வசிக்கும் ஜாரவா இன மக்களைக் குறித்தும் அன்றே தஞ்சைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பு.

Nittavinoda சோழர்களின் பாதுகாவலர்கள்
 
கி.பி.11-ஆம் நூற்றாண்டில் இத்தீவுகள் முழுவதுமே சோழப்பேரரசின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டதாக கதைகள் உண்டு. பெரிய நிக்கோபார்த் தீவருகில் புலிக்கொடி பொறித்த கல்வெட்டு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். அதோடு நிக்கோபாருக்கு உட்பட்ட பகுதிக்கு சோழர்கள் அடிக்கடி பயணித்தாகவும் வரலாறு உள்ளது. இவற்றின் மூலம் இப்பகுதி மக்கள் சோழர்காலத்தில் மன்னர்களின் பாதுகாவல்களாக, மக்களாக இருந்திருப்பர் என கருதப்படுகிறது.

















ஊர் பேர் கேட்டாலே கொன்று திங்கும் ஆதிவாசிகள்! சோழர்களின் பாதுகாவலர்களா??? Reviewed by Author on August 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.