அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை!

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று கிளினிக் சென்ற சென்ற தாய்மார்களை கடமையிலிருந்த வைத்தியர் தரக்குறைவாக பேசி மன ரீதியாக பாதிப்படையச் செய்துள்ளார் என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தாய் ஒருவர் தனது முன்று பிள்ளைகளுடன் மகப்பேற்று கிளினிக் சென்ற போது, அவரின் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிய வண்ணம் இருப்பதை பார்த்த வைத்தியர் அந்தத் தாயிடம் முன்று பிள்ளைகளை பெற்றுக்கொள்ள தெரிந்த உனக்கு அந்த பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதா என்று தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

அன்றைய தினம் பிரிதொரு தாயிடம் வேறு ஏதேனும் நோய்கள் உள்ளதா என்று கேட்டு அதற்கான மருத்துவ அறிக்கையைக் கேட்டுள்ளார். அதற்கு அந்த தாய் நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக கொண்டு திருமணமாகி மன்னாரில் வசிக்கின்றேன்.

முன்பு எனக்கு ஒரு சத்திரசிகிச்சை நடந்துள்ளது . அதற்கான மருத்துவ அறிக்கையை இங்கு கொண்டுவர வேண்டும் என்று எனக்கு தெரியாது. பிறகு கொண்டு வந்து தங்களிடம் காட்டுகின்றேன் என்று கூறியதற்கு அனைவர் முன்னிலையிலும் சத்தம் போட்டுப் பேசியுள்ளார்.

மிக அவதானமாக கவனிக்கவேண்டிய கர்ப்பிணித் தாய்மார்களிடம் மனசாட்சியில்லாமல் சத்தம் போட்டு மருத்துவம் பார்க்கும் வைத்தியரிடம் செல்ல கர்ப்பிணிகள் அஞ்சுகின்றார். குறித்த வைத்தியருக்கு உளவள சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று கர்பிணித்தாய்மார்கள் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.

கர்ப்பிணி தாய்மாருடன் அநாகரிகமாக நடக்கும் மன்னார் வைத்தியர்: உளவியல் சிகிச்சையளிக்க கோரிக்கை! Reviewed by Author on August 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.