அண்மைய செய்திகள்

recent
-

கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் நூலிழையில் பதக்கத்தை இழந்ததேன்: பிடி உஷா -


இந்தியாவின் தடகள மங்கை என்று அழைக்கப்படும் பிடி உஷா தற்போது கேரள மாநிலத்தில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை இழந்தார்.

100-ல் ஒரு பங்கு என்ற அளவில் ருமேனியா வீராங்கனை பிடி உஷாவை முந்தினார். இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து பிடி உஷா கூறியதாவது, ஒலிம்பிக் போட்டிக்காக நான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபோது அங்கு எனக்கு வழங்கப்பட்ட உணவுகள் போதிய எனர்ஜியை கொடுக்கவில்லை.

அங்கு எனக்கு அரசி கஞ்சியுடன் ஊறுகாய்தான் உணவாக வழங்கப்பட்டது. வேகவைத்த உருழைக்கிழங்கு அல்லது அரைவேக்காடு சிக்கன் அத்துடன் தரப்படும் சோயா சாஸ் வழங்கப்பட்டது. அமெரிக்க உணவுகளை சாப்பிட்ட பழக்கம் எனக்கு கிடையாது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கிராமத்தில் அமெரிக்கா உணவு மட்டும்தான் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது
உணவின் காரணமாக, கடைசி 35 மீட்டரில் என்னுடைய எனர்ஜி லெவலை நிலைநிறுத்த முடியாமல் போனது. என்னுடைய ஆட்டமும் மிகவும் பாதித்தது. கடைசி 35 மீட்டரில் எனர்ஜியை தொடர்ந்து ஒரே லெவலாக தக்கவைக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.

கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் நூலிழையில் பதக்கத்தை இழந்ததேன்: பிடி உஷா - Reviewed by Author on August 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.