அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் அவசர எச்சரிக்கை! -


ஐரோப்பாவில் பரவி வரும் புதிய வெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும் அபாய நிலை உள்ளதாக காலநிலை அவதான நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது நிலவும் வெப்பஅலை நிச்சயமாக 1977 யூலையில் ஏதென்சில் பதிவாகிய 48 பாகை அளவை எதிர்வரும் நாட்களில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்தான் 50 பாகை குறித்த இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

இன்று ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் ஏற்கனவே வெப்பம் 47 பாகையை தாண்டியுள்ளது. கடும்வெப்பம் காரணமாக ஸபெயினில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் அங்குள்ள அதிக பிராந்தியங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குளிர்பிராந்தியமாக கருதப்படும் ஸ்கன்டினேவியாவையும் கடும் வெப்பம் விட்டுவைக்கவில்லை. சுவிடனின் உயர்ந்த பனிமலை உச்சிப்பகுதி 13 அடி அளவுக்கு உருகியுள்ளது.
வெப்பஅலை காரணமாக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உடல்வெப்பத்தை தணித்து குளிர்மைப்படுத்தும் சிறப்பு நீர்விசிறிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

அதிக வெப்பநிலை காரணமாக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வீதிகளிலுள்ள தடாகங்களில் மக்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈபில் கோபுர முன்றலில் உள்ள தடாகத்துக்கும் இந்தஅனுமதி கிட்டியது.
லண்டன் வெப்பநிலை இன்று 30 பாகையை தாண்டியது. இத்தாலியின் ரோம் மற்றும் போலந்து தலைநகர் வார்சோவில் பொது இடங்களில் இலவச குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடும்வெப்பத்தால் சில கடற்கரைகளில் திடீர் பாசிவளர்ச்சி இடம்பெறுவதால் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சலாந்தில் வெப்பத்தாக்கம் காரணமாக நாய்களை வளர்ப்போர் அதன் கால்களுக்கு காலணிகளை(சப்பாத்துக்களை) அணிவிக்கவேண்டுமென காவற்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
வெளியே நிலவும் வெப்பத்தை விட நிலங்களின் வெப்பநிலை இருபது இருபத்தைந்து பாகைகள் அதிகம் என்பதால் நாய்களின் கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நகர்வு என அறிவிக்கபபட்டுள்ளது.
இந்த செய்தியை நோக்கும் போது அது வேடிக்கையாக இருந்தாலும் வெப்பநிலத்தில் கால்களை வைக்கும் நாய்களின் வேதனை மிகமிக அதிகம் என சுவிஸ்காவற்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை, ஸ்பெயின்-போர்த்துக்கலில் 47 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் அவசர எச்சரிக்கை! - Reviewed by Author on August 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.