அண்மைய செய்திகள்

recent
-

ஒரு எழுத்துப்போனால் கழுத்து போய்விடும் ....புலவர் சேசு மொத்தம் பிரான்சிஸ்


கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில் நம்மோடு பேசவருகின்றார் ஓய்வுபெற்ற கிராமசேவகர் ஆசிரியர்  புலவருமான கவிஞர் சேசு மொத்தம் பிரான்சிஸ் அவர்களுடனான சந்திப்பின்போது..

தங்களைப்பற்றி…
எனது சொந்த  இடம் மாதாகிராமம் பெரியகுஞ்சுக்குளம் ஆகும் எனது தந்தை லோறன்ஸ் சேசு(முன்னைநாள் ஆசிரியர்)தாயார் சேசு பெண்ஆனாள் என்போராகும. நானும் எனது மனைவி அந்தோனி சைனம்மா தற்போது என்னுடன் இல்லை இறைவனடி சேர்ந்து விட்டார்(தனது 44 வயதில் பாம்புக்கடியால் திடீரென அமரத்துவம் அடைந்துள்ளார்)
பிள்ளைகளான திருமதி.றெஜினா- ஆங்கில ஆசிரியை
திரு.ராஜன் றிச்சட்-றெயில்வே ஊழியர் (தனது 44வயதில் உந்துருளி விபத்தில் மரணமடைந்துள்ளார்) திரு.றஞ்சீற் ரூஸ்வோல்ட் ஆங்கில ஆசிரிய ஆலோசகர்-வவுனியா மாவட்டம் திருமதி.ரூபிறோசலின் கலைமாணி பிரான்ஸ்சில் உள்ளார் திருமதி றெனோல்ட் சுகாதாரப்பணி உதவியாளர் சுகாதாரதிணைக்களம் இவ்வாறான எனது பிள்ளைகளின் வளர்சியில் மகிழ்வோடும் எனது மகனினதும் மனைவியினதும் நினைவுகளோடு பரிகாரிகண்டலில் வாழ்நது வருகின்றேன்.

தங்களது மறக்க முடியாத விடையம் என்றால்….
பலவுள்ளது இருந்தலும் எனது மனைவியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று அமரத்துவம் அடையும் போது எனது பிள்ளைகளுக்கு 20-16-13-11-03 வெண்ணெய் திரண்டு வரும் போது சாடி உடைவதுபோல மனைவியின் இழப்பும் அதுபோல் மூத்தமகன் மனைவி இறந்து 28 ஆண்டுகள் கழித்து 44வயதில் எனது மூத்தமகனின் உயிரிழப்பும் என்னால் என்றுமே என்வாழ்வில் மறக்கமுடியாத விடையங்கள் தான்.

தங்களது கலைப்பணயம் பற்றி—
நான் சிறுவயதில் இருந்தே பாடும்திறனும் நல்ல குரல்வளமும் இருந்தது ஆலயப்பாடல்களோ-சினிமாப்பாடல்களோ-அல்லது மாதோட்ட புலவர்களது மரபுவழி நாடகப்பாடல்களோ பாடுவதில் மிகவும் திறமையுள்ள இளைஞனாக இருந்தேன்.அப்போது ஊர்ப்பெரியவர்களும் அண்ணாவிமார்களும் என்னை உற்சாகப்படுத்தினர் நானும் ஆர்வமாக செயற்பட்டேன்.

அப்படியிருக்கையில் 1965ம் ஆண்டு பரிகாரிகண்டலில் எனது அன்பு மனைவி சைனம்மாவினை திருமணம் செய்துகொண்டேன் 1976ம் ஆண்டுமெல்ல மெல்ல பாட்டியற்றும் ஆற்றலினை வெளிப்படுத்தினேன் எனது மனைவியும் என்னைப்போல் கல்வி கற்றவர் என்றபடியினாலே எனது பாடல்கள் அவருக்கு விருப்பமானதாகவே இருந்தது. 1976 ம் ஆண்டு காலப்பகுதியில் மின்சாரம் இல்லை அதனால் அரிக்கன்லாம்பும் குத்துவிளக்கும் தான் வெளிச்சம் தந்தன நான் எழுதிய நாடகங்கள் கூட கம்பர் காலத்தில் இருந்த குத்துவிளக்குப்போல்தான் கொழுத்திவைத்து எழுதிவந்தேன்.

நான் நிலாமுற்றத்தில் அமர்ந்து பேசுவது எழுதுவதும் வழக்கம்  எழுதும் போது எனக்கருகில் மனைவியும் உடனிருப்பார் அப்படியான தருணத்தில் ஒருநாள் இரவு 10மணியிருக்கும் எனது தலைக்கு மேல் ஒரு சாம்பல் நிறப்புறா சுற்றிவந்து முற்றத்தில் நின்ற மாமரத்தினுல்; நுழைந்துவிட்டது.அப்போ இது என்ன புதினம் இரவில் புறா எனது தலையை சுற்றுகின்றதே என்று புலம்ப எனது மனைவி சொன்னால் இது உங்களுக்கான கலை வெளிப்பாடு பயப்பட வேண்டாம் என்று என்னை ஊக்கப்படுத்தினால் இச்சம்பவத்தின் பின் நான் பாட்டு எழுதுவது அதிகமாக இருந்தது.

அப்படியாயின் அதன் பின்…குருவாக்கும்
இவ்வாறான சம்பவத்தினை கேள்விப்பட்ட  எனது பக்கத்து ஊரவரும் சொந்hக்காரனுமாகிய சுண்டுக்குழி கபிரிகேல் புலவர் என்னை அடிக்கடி வந்து பார்த்ததது எழுதியதை நெறிப்படுத்துவார். ஒருநாள் அமரர் திரு.வி.மொ.கபிரிகேல் புலவர் (எனது மைத்துனர்) அவர்கள் என்னை ஒரு நாட்முடுககூத்து எழுதிக்கொண்டு தனக்கு முன்னறிவித்துவிட்டு தனது வீட்டுக்கு வருமாறும் அதனைப்பார்த்து பிழைதிருத்தி பாடல் முறைகளை சொல்லித்தந்து குருவாக்கு தருவேன் என்று கூறியதால் 1977ம் ஆண்டு ஆவணி புதன் கிழமை நல்ல நாள் பார்த்து சென்றேன் என்னை ஒரு அறையில் வைத்து தனிமையில் எனது பாடலை பார்க்கத்தொடங்கினார். நான் எழுதிய நாட்டுக்கூத்து வேதாகமத்திலே சொல்லப்ட்டிருக்கும் ஊதாரிப்பிள்ளையின் உவமை கதையே ஆகும் அதன் காப்பு விருத்தம் பின்வருமாறு

"ஏர்மேவு மாநகரோர்க்கியம்புகாதை
ஏசுநசரேனுவமையினிதாயீய்ந்த
சீர்மேவு புத்திரர்கள் சிறந்த வாழ்வைச்
செகதலத்தோரறிவதற்குச் சித்தங்கூர்ந்து
பார்மேவு நாடகப்பண்ணிசையதாகப்
பாரிதனிலோதற்கோர் பழுதுறாது
நேர்மேவு பிதாச்சுதனிஸ் பிரித்துசாந்து
நிமலனருட்கமலபதம் நிதங்காப்போம்"


எனும் இப்பாடலை மிகவும் பக்தியாக இனிமையாகப்பாடினேன் உடனே என்னை கட்டி முத்தமிட்டு சந்தோஷம் சந்தோஷம் மச்சான் எனக்கு நல்ல மனமிருக்கு உனக்கு நல்ல குணமிருக்கு இன்றிலிருந்து நீயும் ஒரு புலவன் தான் எனக்குப்பின் நீ இந்த தொழில் செய்வாய் என்று நல்வாக்குரைத்து காறி உமிழ்ந்து எனது வாய்க்குள் துப்பிவிட்டு எனக்கு நல்ல மனமிருக்கு உனக்கு நல்ல குணமிருக்கு என்று நான் சொன்னது உனக்கு நல்ல எழுத்து திறனும் அத்துடன் பாடும் திறனும் மிகத்திநமையாக உள்ளது என்று சொன்னதோடு மட்டுமல்லாது .

நான் எழுதிய சில பாடல்களை நன்றாக இருக்கின்றது என்றும் சில பாடல்களை திருத்தியும் எழுதுவதற்கும் சொல்லித்தந்து நாள்முழுவதும் பாடல்கள் இயற்றும் முறையினை விரிவாகவும் தெளிவாகவும் சொல்லித்தந்துடன் இவை முடிந்தபின் என்னை முழந்தளிடச்சொல்லி நெற்றியில் சிலுவை வரைந்து குருவாக்குரைத்து கன்னத்தில் முத்தமிட்டு மழை முகில் கருக்ககொண்டு விட்டது இன்றிலிருந்து மழைபொழியும் மகிழ்ச்சியாய் இருமச்சான் இன்றிலிருந்து உனது வாயால் புலமை வழிந்துகொண்டே இருக்குமென்று நல்லாசி கூறினார். குருதட்சனையெல்லாம் கொடுத்து மீண்டும் ஆசிர்வாதம்பெற்று மனநிறைவாக வீடு வந்தேன் புலவரிடம் கற்றுக்கொண்டதால் எந்தப்பாடலும் எழுதும் ஆற்றல் உண்டு என்பேன்.

தங்களது புலமைப்பாரம்பரியம் பற்றி---
எமது மூதாதையர்கள் பரம்பரை இந்தியாவிலே பாமப்னெனுமூரிலிருந்து வந்ததாகவும் அவர்கள் புலவர்களாகவும் சித்தவைத்தியர்களாகவும் எம்மிடம் ஏட்டுச்சான்றுகன் உள்ளன எமது வைத்தியப்பரம்பரையில் இரண்டாவது வைத்தியம் செய்துகொண்டு புலவராகவும் அவர் முத்தையா இருந்ததாகவும் சான்றுகள் உள்ளது. இப்பரம்பரையில் நான் புலவராகவும் இவ்வைதியத்தினை செய்த எனது மூத்த சகோதரன் சேசு.மனுவேல் அமரத்துவம் அடைந்ததால் அவரது மூத்தமகன் மனுவேல் யேசுதாசன் வைத்தியரும் கைக்கொண்டு செய்துவருகின்றோம்.12 பரம்பரையில் புலமையும் 13 பரம்பரையில் வைத்தியமும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது.

12வது தலைமுறையில் எனது ஒப்பாட்டன் புலமையினை அமரர் சவுரி ஐயா தான் பாம்பனில்இருந்து இலங்கைக்கு வந்து மன்னார் குஞ்சுக்குளத்தில் குடியமர்ந்து வாழ்ந்தவர் இவர் எமது வைத்தியத்தில் 08வது தலைமுறை மிகுதி 07 தலைமுறையினரும் இந்தியாவிலேதான் உள்ளனர் இவரது வைத்திய ஏடுகள் கவனமாக ஊரவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நீங்கள் எழுதிய  பாடல்கள் நாடகங்கள் பற்றி---
எனது முதலாவது கன்னிப்பாடல் அரங்கேற்றம் 1977ம்அண்டு புரட்டாதி 08ம் திகதி நாட்டுக்கூத்து 03 மணித்தியாளங்கள்
அதற்கு தேடையம் விருத்தம் சிந்து(தரு)தாழிசை கொச்சகத்தரு பொதுமங்களம் உண்டு
"செந்நெல் விளைந்தே மலிய மங்கள வாழ்த்து
முப்பால் தீங்கனி வளம் பொலிய மங்கள வாழ்த்து
இந்நகர் தழைத்திலங்க மங்கள வாழ்த்து
பிழையேதுமனுகாதொழிக்க மங்கள வாழ்த்து"


மாதோட்ட புலவர்கள் மரபுவழி நாடகங்கள்
யோசேவாஸ் முனிவர் வாசாப்பு-1998 எழுதப்பட்டு 31-08-2013 இருமுறை அரங்கேற்றம் செய்யப்பட்டு சிறப்பான நாடகம் என மக்கள் பாராட்டு
இதன் காப்பு வெண்பா
முத்திப்பேறு பெற்றவருள் முனிந்திரனாம் யோசேவாஸ்
சித்தியுறு நற்சரிதை பாடவே-இத்தரையில்
சித்தந்தவநாததித்த சோதிபரன் பூம்பாதம்
நித்தியமுங்காப்பென முன்நிறுத்தினேன்

இக்கதை ஒரு இரவு முழுவதும்  பாட்டு 45 பாத்திரங்கள்(நடிகர்கள்)10 மணித்தியாலம் வரை
  • அந்தோனியார் வாசாப்பு
புனிதரின் புதுமைகள் ஒரு சில காட்சிகளும் தொம்பேதிரு அரசனது மகளின் வெட்டப்பட்ட கூந்தலை ஒட்டவைக்கும் புதுமையும் இன்னும் சில நோயாளர்களை குணப்படுத்தும் காட்சியும உள்ளடக்கியது.
29பாத்திரங்கள் (நடிகர்கள் தேவை) 08-02-2003-01-03-2003 எழுதப்பட்டது இன்னும் அரங்கேற்றப்படவில்லை 08-09-மணித்தியாளங்கள் ஓரிரவுக்கதையாகும்.
  • சவேரியார் வாசாப்பு
புனிதர் மறைபரப்பியதும் ஒரு சில புதுமைகளும் அடங்கியது
பாத்திரங்கள்-45(நடிகர்கள்) எழதிய காலம் 20-07-2004-11-08-2004வரை
இன்னும் அரங்கேற்றப்படவில்லை 08-09-மணித்தியாளங்கள் ஓரிரவுக்கதையாகும்.
நாட்டுக்கூத்துக்கள் ......
  • தாவீது கோலியாத் நாட்டுக்கூத்து
03மணித்தியாளங்கள் எழுதியது-28-12-2001
யேசு சோதிக்கப்பட்டது நாட்டுக்கூத்து
15நிமிடங்கள் எழுதிய காலம்-13-08-2002
பாத்திரங்கள் 05
சமூகநாடகங்கள்(கதைவசனம் இடையிடையே பாடலோடு)
  • பாசம்- 2002ம்ஆண்டு 25 காட்சிகள் கொண்டது.
  • மரியாதையான குடும்பம் 03காட்சிகள் 04பாத்திரங்கள்
  • நானே உலகின் ஒளி 07காட்சிகள் 05பாத்திரங்கள்
நீங்கள் எழுதிய கோவில் கவிகள்பற்றி—
புனித அந்தோனியார் பெயரில்
  • கத்தர் யேசுவைக்கரந்தனிலேந்தியே-கலிப்பா கவி-2003
  • இறையேசு நாதரை இருகரமேந்தியே-கவி-2003
  • ஆதியந்தமில்லாத காரணனை- தாழிசை-2003
  • பதுவையாம் பதியில் பண்புசேர் - தாழிசை-2003
  • பிஞ்சுப்பருவமாமைந்து வயதிலே-கவி- 2003
  • பிஞ்சுவயதைந்திலே பிரபுகுலத்தோன்றலாய்- கவி-2003
  • கன்னிமைந்தனாம் கருணா கடவுள்-கவி-2000
  • அருள் நிறைந்தொளிரும்-தாழிசை-2000
  • வரமேவு பாக்கியனே வானபரனார்தன்-கவி-2001ம்
  • ஆதியோடகிலமனைத்துமே-தாழிசை-2012
காணிக்கை மாதா பேரில்
  • கன்னிமரி மாதாவே காருண்ணிய சீலியே-கவி-2004
  • கங்கை வளைபுவியதனில்-கவி-2004
  • காணிக்கையென்னும் பரிசுத்த நாயகியே-கவி-2004
புனிதர் இயாகப்பர் பெயரில்
  • சீர்பூத்த யேசு நசரேனுதம் சீஷனே கவி-2000
  • ஆதியந்தமில்லாத நாதனவர்-தாழிசை-2000
  • சீர்மேவு எஸ்பாஞ்ஞ தேசத்தில்கவி-கவி-2000
  • துட்டரையடக்கியே தூரத்திலே கவி-2004
சந்த ஆனாள் நாயகி பெயரில்
  • அருட்கொடையென்ற திருநாமம்-கலிப்பாகவி-2004
  • புனித அடைக்கலமாதா பெயரில்
  • 03 கவி;களும்-10-06-2000-06-04-2000
  • புனித தோமையார் பெயரில்
  • 03 கவி.கலிப்பாக்களும்-2000
பெரிய குஞ்சுக்குளம் புனித அங்காமத்து மாதா பெயரில்
05 கவிகளும்(தாழிசை-2)1999
சம்மிக்கேல் பெயரில்
07 கவிகளும்(தாழிசை-கலிப்பா)2009-2012
ஆரோக்கிய அன்னை பெயரில்
04கவிப்பாடல்களும்(2000-2011-2015)
புனித பிலிப்புநேரியர் பெயரில்
அதிமதுரசாந்தனே அமிர்தசஞ்சீலனே கவி-05-05-2000
புனித செபஸ்தியார் பெயரிலும் கார்மேல்மாதா பெயரிலும்-உயித்த ராசன் பெயரிலும் தலா ஒவ்வொரு கவிகளும்.
யோசேவாஸ் முனிவர் பெயரில் 02 கவிகளும்-13-01-2004
கார்மேல் அன்னை பெயரில்
03 கவிகளும்-2008
செபமாலை மாதா பெயரில்
04 கவிப்பாக்களும்(2003-2001-2011)
புனித சூசையப்பர் பெயரில்
06 கவிப்பாக்களும்(2000-2003-2006-2009-2010-2012)
புனித சின்னத்தெரேசம்மாள் பெயரில்
05கவிப்பாக்களும்-2011
புனித சன்நீக்கிலார் பெயரில்
05கவிப்பாக்களும்-2009
கூட்டத்து மாதா பெயரில்
02 கவிப்பாக்களும்-2011
  • புனித இராயப்பர் பெயரிலும் கத்தர் பெயரிலும் தலா ஒவ்வொரு கவிப்பாக்களும்.
புனித லூர்து மாதா பெயரில்
04கவிப்பாக்களும்-2011
புரிகாரி கண்டல் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திற்காக இயற்றிய கோவில் பாடல்கள் 09ம் கோவில் கொடியேற்றும் போதும் திருப்பலிக்கு முன்னும் பாடப்படுபவை.
  • திரு இருதய ஆண்டவர் ஆலய கீதங்கள்
07 கீதங்களும்(1987-1999-2 -2003-2)
  • புனித அந்தோனியாருக்கு ஆலயகீதங்கள்
03 ஆலயகீதங்கள் (1998-2000-2)
  • மடுமாதா பெயரில் ஆலயகீதங்கள்
03 ஆலயகீதங்கள் (2000)
  • பெரியகுஞ்சுக்குளம் புனித அங்கமாத்து மாதா ஆலயகீதங்கள்-1999
பறப்பாங்கண்டல் கூட்டத்துமாதா ஆலயம் லூர்து அன்னைஆலயத்திற்கும்
02 ஆலயக்கீதங்கள்
இவற்றோடு நான் எழுதிய ஆனந்தகலிப்பாக்கள்(திருச்சுரூபபவனிப்பாடல்)
10ற்கு மேற்பட்டவையும்.

மரித்தோர் வீடுகளில் பாடப்படும் கல்வெட்டுப்பாக்களில் 13 மேற்பட்டவையும் அத்தோடு 10 பாடசாலைகளுக்கு மேல் பாடசாலை கீதங்களும் எழுதியுள்ளேன்.
இத்துடன் பாடசாலைப்பிள்ளைகளுக்கு எழுதிய சிறு கவிதைகள்
  • மார்கழிமாதம்
  • கடற்கரை மாலைக்காட்சிகள்
  • தத்துவப்பாடல்கள்
  • சிறு வெண்பாக்கள்
இன்னும் பலவுள்ளன இங்கே நான் சொன்ன  நான் எழுதியதில் 40வீதமானவை தான் மிகுதி நினைவிலும் இல்லை கைவசமும் இல்லை...

நீங்கள் எழுதிய கவிதைகளில் பரிசு பெற்ற கவிதை பற்றி---
எங்கள் தமிழ் இனிய தமிழ் என்றென்றும் வாழுமிது
ஈழமதிலேயுரிமையோடிப்பதும் உரிமை -02 முறை
(04வரிப்பந்திகளாக 10 பந்திகள்-உண்டு-07-03-2003)

"சின்னச்சின்ன விடுகட்டி சேர்ந்து விளையாடுவோம் வா
செந்தமிழில் பாவிசைத்துச்சென்றிடவோம் ஆலயம்
வண்ணப்பா தொடுத்து வடிவான மாலையாக்கி
எந்தைபரனார்க்கனித்து இணையடிகள் நாம் தொழுவோம்."
(10 பந்திகள் உண்டு எழுதிய காலம்-26-05-2001.)

 பாடல்கள் எழுதும் போது நீங்கள்.....
 எனக்கு பாடல் எழுதுவது கைவந்த கலை சின்ன வயசிலே எழுதுவேன் நன்றாகப்பாடுவேன் என்னை அப்போது சொங் மச்டெர் என்றுதான் அழைப்பார்கள்
எனது குரு சொல்லித்தந்தது பாடல் எழுதும் போது அற்ம் விழக்கூடாது  என்று அதை  நான் கவனமாகவுள்ளேன் ஏன் என்றால் ஒரு எழுத்துப்போனால் கழுத்து போய்விடும்  என்பது முன்னோர் வாக்கு
சின்ன உதாரணம்
தனிமையுற-என்றால் தனிமையில் வாழ்தல் என்றபொருளும்
தனிமையற-என்றால் மனைவிபிள்ளைகளுடன் வாழ்தல் என்று பொருள்
எழுத்து ஒன்றுதன் வித்தியாசம் பொருளை பார்த்தீர்களா மிகவும் அவதானமாய் எழுத வேண்டும் அறம் வந்துவிடக்கூடாது அவதானமாய் இருக்கவேண்டும் தற்போது எழுதுபவர்கள் எப்படியோ....எனது பாடல்வரிகளும் பாடலும் உயிருள்ளவை என்பது எனது பாடலை கேட்டமக்களினது வாக்கு.

உங்களது தந்தை பற்றி புலவர் கூறியது
எனது தந்தையிடம் தான் சுண்டிக்குழிப்புலவர் அமரர் வி.மொ.கபிரிகேல் புலவர் அவர்கள் மன்-சிறுக்கண்டல் பாடசாலையில் இரண்டாம் தரம் வகுப்புவரை கல்விகற்றதாகவும் இவர் சிறுக்கண்டலில் கல்வி கற்கும் போது கரவெட்டியைச்சேர்நத கபிரிகேல் பிள்ளை ஆசிரியர் தலமையை ஆசிரியராகவும் எனது தந்தையார் வகுப்பாசிரியராகவும் இருந்து கல்வி கற்பித்ததாகவும் அப்பொழுதே தன்னை  பாடசாலை ஆரம்பிக்கும் பொழுது வரவு இடாப்பு நிரப்பும் பொழுது வி.மொ.கபிரியேல் என்றும் முதல் நாளும் இரண்டாம் நாள் வி.மொ.கபிரியேல் புலவர் என்றும் பெயர் கூப்பிட்டதாகவும் தான் வந்திருக்கின்றேன் என்று பதில் கூறுவதாகவும் அப்படித்தனது வகுப்பாசிரியர் தன்னை அழைத்ததால் தனது குருவின் வாக்கு பலித்தது தான் இப்போது பெயர் பெற்ற புலவனாக வந்துவிட்டேன் என்றுகூறி முத்தமிட்டு மகிழ்ந்து 1977ம் ஆண்டு ஆவணி மாதம் தனது வீட்டில் வைத்து புலமைக்கு குருவாக்கு தரும் பொழுது கூறியதை என்னால் மறக்கவே முடியாது.

உங்களது ஆரம்பகால செயற்பாடுகள் பற்றி.....
எனக்கு தற்பொழுது 78வயது ஆகும் நான் சிரேஸ்ட்ட பாடசாலை தராதரம் வரை கல்வி கற்றுத்தேறியதும் மன்-நறுவிலிக்குளத்தில் தொண்டர் ஆசிரியராக 1958ம் ஆண்டு பணிபுரிந்தேன் பின் 1959-1960ம் ஆண்டுகளில் விவசாயப்பாடசாலையில் சேர்ந்து விவசாயக்கல்வி கற்றுத்தேறி வெளியேறித்தொழிலின்றிருக்கும் போது முருங்கன் ப.நோ.கூ.சங்கத்திலே முகாமையாளராகச்சேர்ந்து 1962-1966 வரை பணி புரிந்தேன் அப்பொழுது கூட்டுறவுப்பயிற்சி நெறியிலும் பங்கு கொண்டு பூர்த்தி செய்து திறமைச்சித்தியும் பெற்றேன் .
மீண்டும் விவசாயத்திணைக்களத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக திருகோணமலையில் பணிபுரிந்து பின் மன்னார் மாவட்டத்திற்கு மாற்றலாகிவந்து விவசாயவிஸ்தரிப்பு சேவையாளராக நீண்ட காலம் கிராமங்களில் பணிபுரிந்து பின் சிறிது காலம் பதில் விவசாயப்போதனாசிரியராகவும் கிராமசேவையாளராக பணிபுரிந்து 1990ம் ஆண்டு ஓய்வு பெற்று அரசசார்பற்ற நிறுவனங்களில் 12 ஆண்டுகள் மக்களுக்கான சேவையாற்றி ஓய்வுபெற்றேன்.

எனது சேவைக்காலங்கள்---
  • தொண்டர் ஆசிரியர் ஒரு தவணை மாத்திரம்
  • ப.நோ.கூ சங்கமுகாமையாளர் -05வருடங்கள்
  • விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்-24வருடங்கள்
  • கிராமசேவையாளர் 03வருடங்கள்
  • அரசசார்பற்ற நிறுவனங்களில்-12 வருடங்கள்
எல்லாம் மொத்தமாக ஏறத்தாழ 45வருடங்களாகும் நான் உத்தியோகம் பாரக்கும் பொழுது மொழி அறிவைத்தேடிக்கற்று சிங்களம் தமிழ் ஆங்கிலம் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.

ஆலயிப்பணிகளில் நான்......

  • பெரியகுஞ்சுக்குளம் புனித அங்காமத்து மாதா ஆலயம்
  • பெருசந்தியார் 02வருடங்கள்-1967-1968
  • ஆலயசபைச்செயலாளர்-02வருடங்கள் 1985-1986
  • சிறுக்கண்டல் புனித அந்தோனியார் ஆலயம்
  • செயலாளர்-15 வருடங்கள்-1971-1985 வரை
  • சங்கீர்த்தம்-02 வருடங்கள்1988-1989 வரை
  • தலைவர் 04 வருடங்கள் 1989-1992 வரை
  • பரிகாரிகண்டல் திரு இருமய ஆண்டவர் ஆலயம்
  • தலைவர்-08 வருடங்கள்
  • இவ்வாலயத்திற்கு  அன்பளிப்பாக 01ஏக்கர் மேட்டுக்காணியினை வழங்கி ஆலயம் அமைவதற்கு காரணமாக இருந்த முன்னோடிகளில் ஒருவர்.
  • பறப்பாங்கண்டல் கூட்டத்தது மாதா ஆலயம்
  • உபதலைவர் 03-வருடங்கள்
  • தலைவர் 02 வருடங்கள் தற்போது ஆலய மகாசபை உறுப்பினர்.

மூத்தகலைஞர் என்ற வகையில் உங்களோடு மக்கள் பற்றி…
எமது மக்கள் தேவையேற்படும் பொழுது தேடிவந்து பாட்டுக்கள் கல்வெட்டுக்கள் வாழ்த்துப்பாக்கள் கவிதைகள் என தமது தேவைகளுக்கு ஏற்றது போல் எழுதி எடுத்துக்கொண்டு செல்வார்கள் அவ்வாறு எழுதிக்கொடுக்கும(நேரம் ஒதுக்கி தான் எழுதவேண்டும் அல்லவா) எழுத்தாளர்களுக்கு கவிஞர்களுக்கு குருதட்ஷனையோ அல்லது சந்தோஷமாக எதாவது கொடுக்கலாமே அப்படி யாரும் செல்வதில்லையே….அப்படி செய்திருந்தால் நான் எழுதிக்கிடக்கும் கவிகள் நூலாக வந்திருக்கலாம் அல்லவா… அந்தவிரக்தியாலும் எனது கலையில் தேக்கநிலை தோன்றியதற்கு காரணம் என்பேன் கலைஞர்களை ஊக்குவிக்க யார் என்றாலும் முன்வரவேண்டும். கௌரவிக்க வேண்டும்.

தற்கால இளைஞர்யுவதிகளுக்கு தங்களின் அனுபவத்தில் இருந்து…தற்காலத்தில் இளைஞர்யுவதிகள் தங்களின் பொன்னான நேரத்தினை மண்ணாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள் அவர்கள் தமது நேரத்தினை முறையான கல்வியிலும் கலைகளை வளர்ப்பதிலும் எமது பாரம்பரியத்தினை காப்பதிலும் அக்கறையுடன் செயற்படவேண்டும் அப்போதுதான் எமது கலையும் கலாச்சாரமும் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் ஆர்வமுள்ள வர்களாக இருக்கின்றார்கள் அதற்கான வழிவகைகளை கல்விச்சமூகம் விரைவாக செயற்படவேண்டும்.

இதுவரை நீங்கள் கௌரவிக்கப்படவில்லையா....
கௌரவித்துள்ளார்கள் விருதுகளுக்கு  என்னை அழைத்தார்கள் நான் தான் போகவில்லை காரணம் எனது மனைவியினதும் மகனினது இழப்பும் சொல்ல முடியாத துன்பமும் தான் அதனால் நானே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன் அதனால் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை நான் இப்போதுதான் கொஞ்ஞம் மீண்டுவருகின்றேன்.

மன்னார் மக்களின் கலைஞர்களின் பிரதிநிதியாக செயற்படும் நியூமன்னார் இணையம் பற்றி…
தற்போதை அவசர உலகத்தில் கலைஞர்களாகிய எங்களை வீடுதேடி வந்து எமது கலைச்செயற்பாடுகளையும் பசுமையான நிகழ்வுகளையும் மீட்டெடுத்து எம்மை மூத்தகலைஞர்களுக்கு உரிய கௌரவத்தினை வழங்கி வரும் நியூமன்னார் இணைய இயக்குநருக்கும் என்னை சந்தித்த வை.கஜேந்திரனாகிய உங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்களும் இன்னும் என்னைப்போல் இருக்கின்ற ஒவ்வொரு கலைஞர்களையும் வெளிக்கொணரவேண்டும் என்று வேண்டுகின்றேன்
தொடரட்டும் உங்கள் பணி வளரட்டும் கலைமணிகள்..


சந்திப்பும் சிந்திப்பும்
வை.கஜேந்திரன்
நியூமன்னார் இணையத்திற்காக






















ஒரு எழுத்துப்போனால் கழுத்து போய்விடும் ....புலவர் சேசு மொத்தம் பிரான்சிஸ் Reviewed by Author on August 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.