அண்மைய செய்திகள்

recent
-

மிகப்பெரிய ’பீன் சாலட்’ - மதுரையில் ஆசிய அளவிலான சாதனை!


தமிழ்நாடு சம்பேர் பவுண்டஷன் நடத்திய "வைப்ரன்ட் தமிழ்நாடு 2018 - Global Expo & Food Summit (Food Edition)" நிகழ்வின் ஒரு அங்கமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு,  செஃப் எம்.எஸ்.ராஜ்மோகன் தலைமையிலான 25-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் இணைந்து "Largest Bean Salad" என்ற உலக சாதனை முயற்சியை செய்தனர். 
சாதனை
இந்த உலக சாதனை முயற்சி - ஆசியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் உலக சாதனைக்காகவும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வினை பார்வையிடுவதற்காக ஆசியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸில் இருந்து மதிப்பீட்டாளர் திரு. விவேக் ராஜா மற்றும் FSSAI சார்பாக திரு.சோமு சுந்தரம்  அவர்கள் கலந்து கொண்டு, 'பீன் சாலட்'-இன் உணவு சுகாதாரம் மற்றும் தரத்தை ஆய்வு செய்தனர்.வெவ்வேறு வகையான 9 பயிர் வகைகளைக் (கொள்ளு, தட்டாண்பயிர், சுண்டல், மொச்சை, பச்சைப்பயறு,பட்டாணி, நிலக்கடலை) கொண்டு அதனுடன் பலவகையான காய்கறிகள் சேர்த்து 1121.6 கிலோவில் இந்த சாலட் தயாரிக்கப்பட்டது. இந்த சாலடானது 50 சதவிகிதம் பயிர் வகைகளால் ஆனது. இதற்காக பிரத்யேக பாத்திரம் மற்றும் அளவுகோல் தயாரிக்கப்பட்டுள்ளது.



மிகப்பெரியளவில் செய்த இந்த 'பீன் சாலட்' ஆனது NGO அமைப்பான "பலக்கரங்கள்" மூலமாக காப்பகங்களுக்கும் ஆசிரமங்களுக்கும் வழங்கப்பட்டது.பாரம்பரிய தமிழ் முறையில் தயாரித்த  இந்த 'பீன் சாலட்' முயற்சி, மக்களிடத்தில் பயிர் வகைகளை உணவில் சேர்த்து

கொள்ளுவதற்கான முக்கியத்துவத்தை எடுத்து சொல்லும் நோக்கத்தோடு செய்யப்பட்டது.உலகிலேயே முதல் முறையாக செய்யப்பட்ட இந்த சாதனை முயற்சிக்கு ஆசியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ், ஆசிய அளவிலான சாதனைக்கான சான்றிதழ்களையும் பதக்கத்தையும் கொடுத்து கௌரவித்தது
மிகப்பெரிய ’பீன் சாலட்’ - மதுரையில் ஆசிய அளவிலான சாதனை! Reviewed by Author on August 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.