அண்மைய செய்திகள்

recent
-

அனைத்து தரப்புகள் மீதும் ஐ.நா நிபுணர்களால் யுத்த குற்றச்சாட்டு....

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
யெமன் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து தரப்புகளும் யுத்த குற்றத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் முறையாக வெளியாகி இருக்கும் இவ்வாறான ஒரு அறிக்கையில், யெமன் அரச படை, அதற்கு ஆதரவான சவூதி தலைமையிலான கூட்டுப்படை மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்க்க குறைந்த அளவே முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்காக மக்கள் கொல்லப்பட்ட பாடசாலைகள் மற்றும் சந்தைகள் மீதான குண்டு மற்றும் பீரங்கி தாக்குதல்கள் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கூட்டுப்படையின் வான் தாக்குதல்கள் மற்றும் கடல் வழிகளை தடுத்திருப்பதும் ஒரு யுத்த குற்றமாவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிபுணர்கள் தமது அறிக்கையை அடுத்த மாதம் கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமை கெளன்சிலில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

யெமன் சிறுவர்கள் பலரும் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீதான இரு வான் தாக்குதல்களை கண்டித்த ஐ.நா சபையை பக்கச்சார்பாக நடப்பதாக கூட்டுப்படை திங்களன்று குற்றம்சாட்டியது.

ஐ.நாவின் தகவல் கிளர்ச்சியாளர்களின் கூற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று சவூதியின் கூட்டுப்படை பேச்சாளர் துர்கி அல் மலிகி குறிப்பிட்டுள்ளார்.

ஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நாட்டின் மேற்கு பகுதியை கைப்பற்றி ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி வெளியேற்றப்பட்டதை அடுத்து 2015 ஆம் ஆண்டு யெமன் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்தது.

ஈரான் ஆதரவளிப்பதாக பரவலாகக் கூறப்படும் ஹுத்திக்களுக்கு எதிராக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மேலும் ஏழு அரபு நாடுகள் யெமன் யுத்தத்தில் தலையிட்டதை அடுத்து அங்கு நிலைமை மோசமடைந்தது.

இந்த யுத்தத்தில் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பொதுமக்களாவர். இந்த மோதல்களால் மேலும் 50,000 பேர் காயமடைந்திருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

இந்த யுத்தம் மற்றும் நாட்டின் மீது கூட்டுப்படை முன்னெடுத்திருக்கு பகுதி அளவான முற்றுகை காரணமாக 22 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளை நம்பி இருப்பதோடு, உலகில் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு அவசர நிலை ஒன்றை ஏற்பட்டுள்ளது. இதனால் பரவிய கொலரா நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து தரப்புகள் மீதும் ஐ.நா நிபுணர்களால் யுத்த குற்றச்சாட்டு.... Reviewed by Author on August 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.