அண்மைய செய்திகள்

recent
-

25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று: ஜேர்மனி மக்களின் அறியாமை....


ஹெச்.ஐ.வி என்றால் என்ன என்று நன்கு அறிந்துள்ள ஜேர்மானியர்கள் பிற பால்வினை நோய்கள் குறித்து அறியாமையில் இருப்பது, ஆண்டுக்கு 25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று ஏற்படுவதாக பாலியல் நலம் மற்றும் மருந்துகள் மையம் வெளியிட்டுள்ள செய்தியால் வெளிவந்துள்ளது.
ஜேர்மனியில் கொனோரியா என்னும் பால்வினை நோய் சமீப ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.

ஆண்டுக்கு 25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று ஏற்படுவதாக பாலியல் நலம் மற்றும் மருந்துகள் மையத்தைச் சேர்ந்த Norbert Brockmeyer தெரிவித்துள்ளார்.
2000த்திலிருந்து சாக்ஸனி மாகாணம் தவிர ஜேர்மனியின் பிற மாகாணங்களில் கொனோரியா நோயை பதிவு செய்வது கட்டாயமில்லை என்னும் விதி கொண்டுவரப்பட்டது.

இதனால் கொனோரியா கட்டுப்படுத்தப்பட்டதாகவும், சொல்லப்போனால் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்கூட கருதப்பட்டது.
ஆனால் அது தவறு என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொனோரியா மட்டுமல்ல அனைத்து பால்வினை நோய்களும் உற்சாகத்துடன் ஜேர்மனிக்கு திரும்பி வந்துள்ளன என்கிறார் Brockmeyer.
தங்களால் இயன்றவரையில், பாலியல் நலம் மற்றும் மருந்துகள் மையம், பாதுகாப்பற்ற பாலுறவு குறித்தும் ஆணுறையின் அவசியம் குறித்தும் எச்சரிக்க முயற்சி செய்கிறது.

ஆனாலும் ஆணுறைகளால் இந்நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க முடியுமே தவிர முழுமையாக பாதுகாப்பு அளிக்க முடியாது.
ஆண்களையும் பெண்களையும், அவர்கள் எவ்வழி உறவு கொள்கிறார்களோ, அதன்படி அந்தந்த உறுப்புகளை பாதிக்கும் இந்நோய், தொட்டாலும் பரவக்கூடியது.
எல்லாவற்றையும் விட மோசம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை இது ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு கொனோரியா நோய்த்தொற்று ஏற்பட்டால், அது கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவுவதோடு கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படுவதற்கும் வழி வகுக்கும்.
முக்கியமாக குழந்தையின் கண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். கொனோரியாவை குணப்படுத்த மருந்துகள் உண்டு என்றாலும், சமீபகாலமாக பல மருந்துகள் வேலை செய்வதில்லை, அதாவது பல மருந்துகள் கொடுத்தாலும் இந்நோய்க்கிருமியை கொல்ல இயலாத ஒரு சூழல் காணப்படுகிறது.

முன்பெல்லாம் ஆசியாவுக்குப் போனால் கொனோரியா வந்து விடும் என்று கிண்டலாக சொல்வார்கள், இன்று அப்படியெல்லாம் இல்லை, ஜேர்மனியில் எங்கும் கொனோரியா கிடைக்கிறது என்னும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது, ஆனால் அதைக் குறித்து எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி.

25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று: ஜேர்மனி மக்களின் அறியாமை.... Reviewed by Author on September 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.