அண்மைய செய்திகள்

recent
-

யாழ் அகத்தியன் படைத்த ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா....


ஈழத்தின் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் நிறைவேறிய இலண்டன் யாழ் அகத்தியன் படைத்த ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா.

ஒரு படைப்பாளர். நூல்கள் ஐந்து. கடினமான முயற்சிதான். கைகூடியுள்ளது. ஈழத்தினைச் சேர்ந்தவரும் இலண்டனில் வசிப்பவருமாகிய இளைய படைப்பாளர் கவிஞர் யாழ் அகத்தியன் எழுதி வள்ளுவர்புரம் 'செல்லமுத்து வெளியீட்டகம்' வெளியீடாக,
  1. செல்லாத நாணயம், 
  2. இன்னொரு கண்,
  3.  நாளைகளின் நறுமணம், 
  4. என் நதியில் உன் பரிசல், 
  5. என் நகல் நீ ஆகிய‌ ஐந்து நூல்களின் வெளியீட்டு விழாவானது ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ் பொதுசன நூலகத்தில் 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்வுக்கு யாழ் மாநகர சபை ஆணையாளர் கவிஞர் இ.த.ஜெயசீலன் அவர்கள் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் பங்கேற்றார்.

யோ.புரட்சி ஒழுங்கமைப்பில் கவிஞர் யாழ் சபேசன் நிகழ்ச்சித் தொகுப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐந்து நூல்களையும் நிகழ்வின் பிரதம அதிதியான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் வெளியிட முதற்பிரதியினை தொழிலதிபரும், கிருபா லேணர்ஸ் அதிபருமான 'சமூக திலகம்' அ.கிருபாகரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சமநேரத்தில் ஐந்து நூல்களின் 'நூலடக்கப் பகிர்கை' இடம்பெற்றது.
'நாளைகளின் நறுமணம்' நூலினை கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எழுத்தாளர் வேதநாயகம் தபேந்திரன் அவர்களும்,
  • 'செல்லாத நாணயம்' நூலினை கவிஞரும் தமிழாசிரியருமான வே.முல்லைத்தீபன் அவர்களும், 
  • 'என் நதியில் உன் பரிசல்' நூலினை 'யாழ் களரி' பத்திரிகையின் ஆசிரியர் கவிஞர் ஜோ.ஜெஸ்ரின் அவர்களும், 
  • 'என் நகல் நீ' நூலினை வவுனியா தமிழ் விருட்சம் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களும், 
  • 'இன்னொரு கண்' நூலினை கவிதாயினி வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா அவர்களும் நூலட‌க்கப் பகிர்கை வழங்கினர்.

தொடர்ந்து யாழ்.செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் பிரதாபன் பிரதீபன் கரகாட்டம் நிகழ்த்தினார். பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து ஊற்று வலையுலக கலைஞர்கள் மன்றத்தினரால் நூலாசிரியருக்கான கெளரவிப்பு இடம்பெற்றது. யாழ் பாவாணன் மின்னூல் வெளியீட்டக இயக்குநர் யாழ்பாவாணன் இதனை நெறிப்படுத்தினார். நூலாசிரியருக்கு 'கவிப்பொழில்' பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நூலாசிரியர் சார்பில் மெற்றோர் திரு திருமதி ப.ஏரம்பமூர்த்தி இணையர் இதனை ஏற்றனர். வாழ்த்துக் கவிதையினை 'மீளும் நினைவுகள்' ஆசிரியர் கவிஞர் காவலூர் அகிலன் வழங்கினார்.
நன்றியுரையினை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வற்சலா துரைசிங்கம் வழங்கினார்.
ஐந்து நூல்களையும் வெளியீடு செய்த கவிஞர் யாழ் அகத்தியன் அவர்கள் ஈழத்தின் யாழ்ப்பாணம் புங்குடுதீவினைச் சேர்ந்தவர். கடந்த 2002ஆம் ஆண்டு முதலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருபவர்.
 








யாழ் அகத்தியன் படைத்த ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா.... Reviewed by Author on September 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.