அண்மைய செய்திகள்

recent
-

முதல்வர் விக்கி தலைமையில் புதிய கூட்டணி அடுத்த மாதம் -


வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியாக உருவாக்கப்படும் இந்த புதிய கூட்டணியில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கட்சிகள் சாதகமான பதில்களை வழங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது. வடக்கை சேர்ந்த கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் மற்றும் வெளிநாடு வாழ் புலம்பெயர் சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்து, சபை கலைக்கப்பட்டதும் புதிய அரசியல் கூட்டணியின் தலைமை பொறுப்பை விக்னேஸ்வரன் ஏற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
முதல்வர் விக்கி தலைமையில் புதிய கூட்டணி அடுத்த மாதம் - Reviewed by Author on September 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.