அண்மைய செய்திகள்

recent
-

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு! ஏழு தமிழர்களின் விடுதலையில் திடீர் திருப்பம் -


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் சிறையில் கடந்த 28 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 7ம் திகதி அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9ம் திகதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில் குறித்த ஏழு பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
பின்னர் தமிழக ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. எனினும், தமிழக ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைகுறித்து அமைதி காத்து வருகின்றார்.

இதற்கிடையில் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின. அதற்கு ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்தது.
அதில் உள்துறை அமைச்சகத்திற்கு 7 பேரின் விடுதலைகுறித்து எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை. 7 பேரின் விடுதலை குறித்து அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, நியாயமாக முடிவு எடுக்கப்படும்.
இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்புகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும் கவனமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

அரசியல் அமைப்ப சட்டத்திற்கு இணக்கமாக, நேர்மையாகவும் நியாயமாகவும் முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, அருகில் இருந்த 14 பேரும் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பம் 7 பேரின் விடுதலைக்கு ஆரம்ப முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என நீதிமன்றத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி படுகொலையின் போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மூன்று வாரத்திற்கு பிறகு புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு! ஏழு தமிழர்களின் விடுதலையில் திடீர் திருப்பம் - Reviewed by Author on September 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.