அண்மைய செய்திகள்

recent
-

கமல்ஹாசன் டிரம்புக்கு தேர்தல் வியூகம் அமைத்தவருடன் கூட்டணி


எதிர்வரும் மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான தேர்தல் வியூகங்களை டிரம்புக்காக பணியாற்றிவர் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கான பிரசார வியூகங்களை வகுத்தவர்களில் முக்கியமானவர் Avinash Iragavarapu.
இந்தியரான இவரே தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான மக்களவை தேர்தல் வியூகங்களை வகுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 18 மற்றும் 19 திகதிகளில் கோயமுத்தூரில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்- கட்சி நிர்வாகிகளுக்கு பயிலரங்கம் நடந்தது.
இதில் அரசியல் களத்தில் எப்படி செயல்பட வேண்டும்? என்பது பற்றி அவினாஷ் வகுப்பெடுத்திருக்கிறார். மேலும் கமலுக்கான தேர்தல் வியூகங்களையும் அவினாஷ் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

கடந்த மக்களளை தேர்தலின் போது பிரசாந்த் கிஷோர் என்ற தேர்தல் வியூக நிபுணரை தங்கள் பிரச்சார வியூகம் அமைக்க அறிமுகம் செய்து கொண்டதுடன், அதன் மூலம் மோடியை அமோக வெற்றியடைய செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் டிரம்புக்கு தேர்தல் வியூகம் அமைத்தவருடன் கூட்டணி Reviewed by Author on September 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.