அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: டிரம்பின் ஆலோசகர் கைது


லண்டன் பப் ஒன்றில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து கருத்து தெரிவித்து அதுகுறித்த விசாரணைக்கு வித்திட்ட டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு 14 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.


31 வயதாகும் ஜார்ஜ் பாபுடோபுலஸ் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தான் பொய்யால் தவறிழைத்த "தேசப்பற்றுள்ள அமெரிக்கர்" என்று தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம், ரஷ்யாவுக்காக தான் பேச்சுவார்த்தை நடத்திய நேரங்கள் குறித்து எஃப்பிஐ-யிடம் பொய் கூறுவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது குறித்த விசாரணையில் கைது செய்யப்படும் டிரம்பின் முதல் உதவியாளர் இவரே.

தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறிவிட்டதாகவும், தன்னை மீட்டுக் கொள்ள இரண்டாவது வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பாபுடோபுலஸ் கேட்டுக் கொண்டார்.

இந்த விசாரணை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் உண்மை வெளியே வருவது முக்கியம் எனவும் பாபுடோபுலஸ் தெரிவித்தார்.


சிக்காகோவை சேர்ந்த இவர், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிரம்பின் பிரசாரக் குழுவில் தன்னார்வ வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக சேருவதற்கு முன் லண்டனில் பெட்ரோலிய ஆய்வாளராக இருந்தார்.

அதன் பிறகு, மால்டா நாட்டைச் சேர்ந்த மர்மமான பேராசிரியரிடம் பாபுடோபுலஸ் நட்பு வைத்துள்ளார்.

அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் குறித்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் தங்களிடம் உள்ளதாக அந்த பேராசிரியர் பாபுடோபுலஸிடம் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இருந்த டிரம்பிடமும், பிரசாரத்தின் தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களிடமும், நவம்பர் 2016 தேர்தலுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் புதனுடன் சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து கேட்டுள்ளார் ஜார்ஜ் பாபுடோபுலஸ்.

ஜார்ஜின் இந்த கோரிக்கையை அறையில் இருந்த சிலர் மறுத்துள்ளனர். ஆனால் இதற்கு சரி என்று தலையசைத்த டிர்மப், இது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை ஷெஷென்ஸிடம் கொடுத்தார். ஷெஷெஸுக்கு அந்த யோசனை பிடித்திருந்தாக தெரிந்தது. மேலும் பிரசாரக்குழு இதனை பார்த்து கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.


சிஎன்என் ஊடகத்திடம் நடந்த நேர்காணலில் "டிரம்ப் இதுகுறித்து சரியென தலையசைத்த போதும், புதினுடனான சந்திப்பு குறித்து பெரிதாக ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை" என்று ஜார்ஜ் தெரிவித்தார்.

ஆனால் அபோது செனேட்டராகவும், அட்டார்னி ஜெனரலாக இருந்த ஜெஃப் ஷெஷன்ஸ் மிகவும் ஆர்வமாக இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

லண்டனில் பப் ஒன்றில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் மால்டா பேராசிரியர் சந்திப்பு குறித்து தெரிவித்தார் ஜார்ஜ். பின் அந்த தூதர் அமெரிக்க அதிகாரிகளிடம் அதனை தெரிவித்தார்.

எஃப்பிஐ பாபுடோபுலஸை விசாரித்தபோது அவர் அதிபர் தேர்தல் குழுவில் சேருவதற்கு முன்னதாக ரஷியாவுடன் தொடர்புடைய இரண்டு நபர்களை சந்தித்ததாக பொய் கூறினார்.

ஆனால் அவர் டிரம்பின் குழுவில் சேர்ந்த பிறகே அவர்களை சந்தித்தார்.

ஜார்ஜ் ஒரு `முட்டாள்` என்றும், எஃபிஐயிடம் ஒரு முட்டாளை போன்று பொய் கூறிவிட்டதாகவும் ஜார்ஜின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால் இதுவொரு `சூனிய வேட்டை` என்றும், `போலி செய்தி` என்றும் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: டிரம்பின் ஆலோசகர் கைது Reviewed by Author on September 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.