அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்-(படம்)

ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்றத்தில் இறுதியாக இடம் பெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கில் படையினர் வசம் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் றெஜினோலட்; குரே தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (27) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுனர் றெஜினோலட்; குரே,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண ஆளுனர் றெஜினோலட்; குரே அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

ஜனாதிபதி அவர்கள் வடமாகாண ஆளுனரான என்னிடம் பனிப்புரையினை விடுத்திருந்தார்.
-வடமாகாணத்தில் உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பனிப்புரை விடுத்திருந்தார்.

-அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறிப்பாக விடுவிக்கப்பட்ட காணிகள் தவிர்ந்த விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.குறிப்பாக மன்னார் சகர நுழைவாயிலில் இராணுவ வசம் காணப்பட்ட கூட்டுறவு சங்கத்திற்கான கட்டிடம் காணப்பட்ட இடம் எதிர்வரும் திங்கட்கிழமை(29) கூட்டுறவு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

-மேலும் முள்ளிக்குளம் பிரதேசத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 100 ஏக்கர் காணயில் 23 ஏக்கர் காணியினை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும் கடற்கடையினர் தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமையினால் ஒரு சில மாதங்களில் குகுறித்த 23 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளனர்.இதே போன்ற மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறை கடற்படை முகாம்,பேசாலையில் மீன் பிடி திணைக்களத்திற்கு சொந்தமான இராணுவம் தற்போதுள்ள காணி விடுவிப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் காணி விடுவிப்பு தொடர்பில் மேலும் ஒரு கூட்டத்திற்கு வரும் போது விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் தரவுகளை கடற்படையினர்,இராணுவம்,பொலிஸார் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் உரிய முறையில் வழங்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டது.

-மேலும் வன இலாக திணைக்களம்,வன ஜீவராசிகள் திணைக்களம் தொடர்பாகவும் மாவட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-குறித்த கலந்துiரையாடலில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர். மாவட்ட மேலதிக செயலாளர்,பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள், இராணுவம், கடற்படை, வான்படை,பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்-(படம்) Reviewed by Author on October 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.