அண்மைய செய்திகள்

recent
-

அலரி மாளிகையில் சற்று முன்னர் ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்! -


நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்ற நிலையில் தென்னிலங்கையில் பாரிய மாற்றங்களை அது ஏற்படுத்தியுள்ளது.

ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு அலரி மாளிகையில் நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

42ஆவது திருத்தச் சட்டத்தின் 19ஆம் சரத்தின் அடிப்படையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் நானாவேன்.">நாடாளுமன்றில் எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதனை முறியடித்தேன்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை இருக்கும் வரையில் நான் தான் பிரதமர், வேறு யாருக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது.
நான் தொடர்ந்தும் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பேன். வேறு ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டுமாயின், நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அல்லது அமைச்சரவையை கலலக்குமாறு நான் கோர வேண்டும். நாடாளுமன்றமே இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும்.
எனக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. வேறு யாருக்கும் பெரும்பான்மை பலம் இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். என்னை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நீக்க வேண்டும், அல்லது பிரதமராக ஒருவர் தனது பலத்தை நாடாளுமன்றில் நிரூபிக்க வேண்டும்.

இதேவேளை, சபநாயகர், நிலையியற் கட்டளையின் அடிப்படையில் நாடாளுமன்றை கூட்டுவார். எமது பொது வேட்பாளருக்கே மக்கள் வாக்களித்தனர்.
நாடாளுமன்றின் நியதிகளுக்கு புறம்பான வகையில் என்னால் செயற்பட முடியாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கமல்

 
அலரி மாளிகையில் சற்று முன்னர் ரணில் விடுத்துள்ள அதிரடி சவால்! - Reviewed by Author on October 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.