அண்மைய செய்திகள்

recent
-

அன்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்....இன்று நோபல் பரிசு வாங்கி சாதனை -


மகளிர் நல மருத்துவர் ஒருவருக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணுக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டைச் சேர்ந்த Dr. Denis Mukwege (63) மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானபின்னும் தைரியமாக பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் Nadia Murad (25) ஆகிய இருவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்குமுன் கொலைகாரர்களின் தாக்குதலில் மயிரிழையில் உயிர்பிழைத்தபின்னும் உலகின் கவனம் காங்கோ பெண்களின்மீது விழும் வரையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தவர் Dr. Denis Mukwege.
சரியான மருத்துவமனைகள் இல்லாத Bukavu என்னும் இடத்தில் போதுமான அளவில் மின் வசதியோ, மயக்க மருந்துகளோ இல்லாத நிலையிலும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட எண்ணிக்கையில் அடங்காத பெண்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டவர் Dr. Denis.


பாலின சமத்துவம் மற்றும் போரில் பெண்கள் வன்புணர்வு செய்யப்படுதல் போன்றவற்றிற்கெதிராக காங்கோ நாட்டவர்களுக்காக மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ளவர்களுக்காக குரல் கொடுப்பவர் Dr. Denis.
2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில், பெண்களுக்கெதிராக வன்முறையை பயன்படுத்தும் மற்றும் பாலியல் வன்புணர்வை ஒரு போர் யுக்தியாக பயன்படுத்தும் அநீதியான யுத்தங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என உணர்ச்சிகரமாக உரையாற்றி முடித்து சொந்த நாடு திரும்பினார்
ஆனால் சில நாட்களுக்குள், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அவரது பாதுகாவலர்களைக் கொன்று விட்டு, அவரது பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு நடத்திய தாக்குதலில் அதிசயவண்ணமாக உயிர் பிழைத்தார் Dr. Denis.

Nadia Murad தன் ஊரைச் சேர்ந்த பல பெண்களுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.ஒரு ஐ.எஸ் நீதிபதியிடம் அடிமையாக விற்கப்பட்டார் அவர். அவன் அவளை கொடூரமாக பலமுறை வன்புணர்வு செய்ததோடு, அவள் தப்ப முயன்றபோது தனது பாதுகாவலர்களிடம் அவரை ஒப்படைத்தான்.
அவர்கள் ஒவ்வொருவராக அவரை பாலியல் வன்புணர்வு செய்தார்கள்.மீண்டும் தப்பிய Nadia Murad தைரியமாக தனது பெயரை ஊடகங்களில் வெளியிட அனுமதித்ததோடு, தனது புகைப்படத்தையும் ஊடகங்களில் வெளியிட வற்புறுத்தினார்.இன்றும் Nadia Murad பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

அன்று பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்....இன்று நோபல் பரிசு வாங்கி சாதனை - Reviewed by Author on October 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.