அண்மைய செய்திகள்

recent
-

மனிதகுல வரலாற்றின் அடையாளங்களை பேணி வாழுகின்ற செம்மொழி சார்ந்த இனம் தமிழினமாகும் -


வாழ்ந்து வரலாறு காட்டிய மூதாதையர்களை அரவணைத்து அறிவுபெறுவது எமது வரலாற்றுக் கடமையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு புத்தூர் கிழக்கைச் சேர்ந்த முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.
காத்மாஜி சனசமூக நிலையத்தில் சமாதான நீதவான் கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இப்பூமிப்பந்தில் வாழுகின்ற ஒவ்வொரு உயிரினங்களும் தங்களுடைய மொழி, கலாச்சார,பண்பாடுகளை ஒலி வடிவிலோ செயற்பாட்டு வடிவிலோ வெளிப்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அவ்வுயிரினங்களில் ஆழமான சிந்தனைகளைக் கொண்ட ஆறறிவு படைத்த மனித இனம் உலகில் பல இன, மொழி அடிப்படையில் காணப்பட்டாலும் தமக்கென தனித்துவமான கலை, கலாச்சார, பண்பாட்டு, மொழி, நில அடையாளங்களை கொண்டிருக்கின்றது.


அவ்வாறான மனிதகுல வரலாற்றின் அடையாளங்களை பேணி வாழுகின்ற செம்மொழி சார்ந்த இனம் தமிழினமாகும் என்றும் கூறியுள்ளார்.
இத்தேசிய இனம் தன் அடையாளங்களை பேணும் வகையில் முதியவர்களையும் சிறுவர்களையும் தன் பொக்கிசங்களாக கொண்டிருப்பது வரலாற்றின் சிம்ம சொப்பனமேயாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் முதியவர்களுக்கான கௌரவம் வழங்கப்பட்டதுடன், மகிழ்வூட்டும் வகையிலான கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளி புதுவை அன்பனின் 'அத்திவாரங்கள் அழுகின்றன' என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டமை நிகழ்வை மேலும் மெருகூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனிதகுல வரலாற்றின் அடையாளங்களை பேணி வாழுகின்ற செம்மொழி சார்ந்த இனம் தமிழினமாகும் - Reviewed by Author on October 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.