அண்மைய செய்திகள்

recent
-

பெண்களை தாக்கும் சினைப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி?


சுமார் 80 பெண்களில் ஒருவருக்கு சினைப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பாதிப்புடைய 110 பெண்களில் ஒருவர் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் மார்பக, கர்ப்பப்பை, முன்பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் கொண்டிருந்த பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் உருவாகும் ஆபத்து மேலும் அதிகம்.
அறிகுறிகள்
  • மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது.
  • சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல், மலச்சிக்கல், முதுகு வலி அல்லது கால்வலி என்பன ஏற்படும்.
  • உடலில் உள்ல ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம், ஊட்டச்சத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு.
  • கருப்பையின் உள் துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதை தான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
  • பிறப்புறுப்பில் கசிவு,பிறப்புறுப்பில் ரத்தம் வடிதல் மற்றும் மிக சீக்கிரமான பருவமடைதல் ஆகியவை ஆகும்.
முக்கிய காரணங்கள்
  • பெண்களுக்கு உண்டாகும் மலட்டுதன்மைக் காரணமாக 30% வரை சினைப்பை நீர்கட்டிகள் உருவாகும்.
  • பெண்களுக்கு ஆண்களைப் போல் மார்பு, முதுகு, தொடை போன்ற இடங்களில் அதிக முடி வளர்ச்சி இருக்கும்.
  • உடலில் உள்ள கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் கருமையான நிறம் சற்று அதிகரித்து காணப்படும்.
  • மேலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
தடுக்க செய்ய வேண்டியவை
  • எண்ணெய்யில் பொரித்த உணவு, துரித உணவுகளை அறவே தொடக்கூடாது. மாவுச்சத்தை குறைத்து, நார்ச்சத்துள்ள உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
  • தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். எதுவாக இருந்தாலும் ஒரே வகை எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் மூன்று வேளை சாப்பிடும் உணவை ஆறு வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். இவற்றுடன் கொஞ்சம் உடற்பயிற்சியும் கட்டாயம் தேவை.
  • மாதவிடாய் பிரச்சனையிருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.
  • நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.
பெண்களை தாக்கும் சினைப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி? Reviewed by Author on October 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.