அண்மைய செய்திகள்

recent
-

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிரடியாக கேப்டன்களை மாற்றப் போகும் அணிகள்? வெளியான தகவல் -


இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் அடுத்தாண்டுக்கான போட்டியில் மூன்று அணிகள் தங்கள் கேப்டன்களை மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடர்பான ஐபிஎல் போட்டி அடுத்தாண்டும் நடைபெறவுள்ளது.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
ஆனால் இந்த ஐபிஎல் தொடருக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. ஏனெனில் அடுத்தாண்டு மே மாதம் 31-ஆம் திகதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
இதனால் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் மே 1-ஆம் திகதிக்கும் பின் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

அதே போன்று தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த வீரர்களும் மே 12-ஆம் திகதிக்குள் சென்றுவிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதியானால் இந்த மூன்று நாடுகளின் வீரர்களும் பல லீக் போட்டிகளிலும் குறிப்பாக பிளே-ஆப் சுற்றிலும் விளையாட மாட்டார்கள். அது அணிகளுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும்.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் மட்டும்தான் தொடர் முழுவதும் உறுதியாக விளையாடுவார்கள்.
ஏப்ரல், மே மாதத்தில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் போட்டி அட்டவணைகள் வெளியீடுவதிலும் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மூன்று அணிகள் தங்கள் கேப்டன்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக இருக்கும் அஜின்கியா ரகானே தற்போது மாற்றப்பட்டு ஜோஸ் பட்லர் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏனெனில் கடந்த ஆண்டு இவர் துடுப்பாட்டத்தில் சொதப்பியதால், இதன் காரணமாக அவரால் அணியை வழிநடத்த முடியவில்லை தற்போது அவருக்கு பதிலாக பட்லர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் மாற்றப்பட்டு கேஎல் ராகுல் அவருக்கு பதிலாக தலைவராக நியமிக்க பட வாய்ப்புகள் உள்ளது.
சென்ற வருடம் ஓரளவுக்கு நன்றாக ஆடி அணி இந்த வருடம் மேலும் நன்றாக ஆட வேண்டும் என்றால் அவர்களது தலைவரை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவராக இருகும் ஸ்ரேயஸ் தற்போது தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு சிகர் தவான் தலைவராக நியமிக்க பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிரடியாக கேப்டன்களை மாற்றப் போகும் அணிகள்? வெளியான தகவல் - Reviewed by Author on November 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.