அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அங்கவீனமுற்ற நபர்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம்- S.குணபாலன்.


மன்னாரில் அங்குராப்பணம் செய்து வைக்கப்படும் அங்கவீனமுற்றவர்களுக்கான அமைப்பு சிறந்த முறையில் செயல்படுமாகில் நீங்கள் சமூகத்தில் மத்தியில் ஒரு அந்தஸ்து உள்ள பிரஜைகளாக கணிக்கப்படுவீர்கள். அத்துடன் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பீர்கள். இதற்கு முதலில் உங்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம் என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அங்கவீனமுற்ற நபர்களுக்கான சுய உதவி அங்கத்வதர்களுக்கான கலந்துரையாடலும் அமைப்பின் அங்குராபணக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் திங்கள் கிழமை 12.11.2018நடைபெற்றது.

இக் கூட்டத்தில் உதவி மாவட்ட செயலாளர் S.யசீர்தன், சமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர் S.J..லியோன் உட்பட பல அங்கவீனமுற்றோர் இதில் கலந்து
கொண்டனர். இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தை தவிர்ந்த வெளி மாவட்டத்தில் நான் கடமைபுரிந்த பொழுது இவ்வாறன நபர்களுக்கான சங்கம் உருவாக்கப்பட்டத்தில் அவர்கள் தங்கள் சுய தொழில் ஊடாக பல கோடி ரூபாக்களை சேகரித்து அவர்கள் தங்கள் சுய தொழில் வேலை திட்டங்களில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

ஆகவே மன்னார் மாவட்டத்திலுள்ள அங்கவீனமுற்ற நீங்களும் முதலில்
உங்களுக்குள் உள்ள ஒவ்வொரு அங்கத்துவரையும்  இனம் காணப்படல் வேண்டும். அவர்கள் தங்களால் செய்யக்கூடிய சுயதொழிலுக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கென பல திட்டங்களும் பணமும் இருக்கின்றன. ஆனால் உங்களுக்குள் ஒரு சரியான அமைப்பு இல்லாமையால் நீங்கள் உங்களுக்கான உதவி திட்டங்களை தெரிந்து கொள்ள முடியாத நிலையிலும் உதவிகளை பெறமடியாத நிலையிலும் இங்கு இருந்து வருகின்றீர்கள்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் நீங்கள் சமூகத்தின் மத்தியில் ஒரு
அந்தஸ்து உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாக
இருக்கின்றது. அதற்கு முதலில் உங்கள் மத்தியில் ஒற்றுமை தலைத்தோங்கி
இருக்க வேண்டும். அதற்கு இன்று உருவாக்கப்படும் இந்த அமைப்பு சரியான
முறையில் செயல்பட வேண்டும்.

நீங்கள் உங்கள் அமைப்பை சரியான முறையில் இயங்கி மற்றையவர்களுக்கு
திருப்திபடுத்தி வருவீர்களானால் நாங்கள் அரசாங்கத்திடமிருந்தும்
ஏனையவர்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்று உங்களை மேன்மைபடுத்த முடியும்.

வருங்காலத்தில் உங்களுக்கு உதவி திட்டங்கள் வருமாகில் உங்கள்
அமைப்பினூடாகவே தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும். ஆகவே நீங்கள்
இப்பொழுதே வறுமையின் கீழ் இருப்பவர்கள் செய்யக்கூடிய தொழில் சம்பந்தமாக விபரங்களை தயார் நிலையில் வைத்திருந்தால் எங்கேயாவது திட்டங்கள் கிடைக்கும் பட்டசத்தில் உடன் அவர்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும்.

இன்று துணுக்காய் பகுதியில் உங்களைப்போன்ற அங்கவீனமுற்றவர்கள்தான்
உள்ளூர் உற்பத்திப் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருமானத்தை
பெற்று வருவது கண்கூடாக இருக்கின்றது. ஆகவே இவர்களைப் போன்று உங்களாலும் செய்ய முடியும் என்றார்.




மன்னார் மாவட்ட அங்கவீனமுற்ற நபர்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம்- S.குணபாலன். Reviewed by Author on November 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.