அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய சூரன் போர் -படங்கள்


இந்து மக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி விரத இறுதி நாளான 13-11-2018 இன்று சூரன்போர் இடம்பெற்று வருகின்றமை வழமை.

 மன்னார் பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய கந்த சஷ்டி உற்சவ சூரன் போர் நிகழ்வானது வசந்த மண்டப பூசை இடம்பெற்று முருகப் பெருமான் உள் வீதி வலம் வந்து பின்னர் முருகப்பெருமான் மகா அசுரனான சூரனை வதம் செய்யும் நிகழ்வானது (சூரசம்ஹாரம்)சூரன்  போர் ஆலய  வளாகத்தில் பிரதம குரு மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நாடெங்கிலும் வழமையாக நடைபெற்கின்ற நிகழ்வானது 13-11-2018 செவ்வய்க்கிழமை சுமார் 04-30-06-00 மணிவரை 1-30 மணித்தியாலங்கள் நடைபெற்ற சூரன் போர் நிகழ்வானது எமது சமயசமூகப்பண்பாட்டினையும் கலாச்சாரத்தினையும் எடுத்தியம்புவதாக அமைந்தமை சந்தோசமே.

 சிறுகுறிப்பு-சூரன்  போர்
அசுரர்கள் தாம் செய்த தவ வலிமை காரணமாக வல்லமை பெற்று அந்த ஆணவ முனைப்பினால் நற்குணங்களுக்குப் பாத்திரமான தேவர்களை கொடுமைப்படுத்துகின்றனர். பல இன்னல்களைச் செய்கின்றனர். தேவர்களை இவிவின்னல்களிலிருந்து மீட்கும் தெய்வமாக முருகப் பெருமான் அசுரர்களை வதம் செய்து தேவர்களை மீட்கின்றார். புராணக் கதைகள் பாமர மக்களுக்கு மிகவுயரந்த தத்தவங்களை இலகுபடுத்தி விளக்க எழுந்தவையாகும்.

இங்கு மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை என்பனவே அசுரர்களாக விபரிக்கப்படுகிறது.
  • மாயைக்குத் தாரகாசுரனும், 
  • கன்மத்திற்கு சிங்கமுகாசுரனும், 
  • ஆணவத்திற்குச் சூரபத்துமனும் உருவகப்படுத்தப்படுகிறார்கள. இம்மும்மலங்களையும் திருவருட் சக்தியாகிய ஞானவேல் எனும் முருகன் திருக்கை வேல் அழித்து விடுகின்றது. ஆன்மா முத்தியின்பப் பேறினை பெற்றுய்ய வழிபிறக்கிறது.
தொகுப்பு -வை-கஜேந்திரன்-
 















SHOOTINGS-V.KAJENTHIRAN
மன்னார் பேசாலை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய சூரன் போர் -படங்கள் Reviewed by Author on November 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.