அண்மைய செய்திகள்

recent
-

'பகலில் காணும் கனவுகள்' நூல் வெளியீட்டு விழா....


ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் வரணியைச் சேர்ந்த படைப்பாளர் வடவரணி சி.சபா அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகள் காலமாக எழுத்துலகில் இருப்பவர். ஆயினும் இவர் நூலெதனையும் வெளியிட்டிருக்கவில்லை. வடவரணி சி.சபா எழுதிய முதற்கவி நூலான 'பகலில் காணும் கனவுகள்' நூலின் வெளியீட்டு விழாவானது 03.11.201 சனிக்கிழமை முற்பகல் 09.30 மணிக்கு,ஈழத்தின் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. 'நதியோர நாணல்கள் இலக்கிய அமைப்பு' வெளியீடான இந்நூலின் வெளியீட்டு விழாவிற்கு அமைப்பின் தலைவர் வ.ஜசிந்தன் தலைமை வகித்தார்.

பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா பங்கேற்றார்.

முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை மாணவிகள் திவ்யா, நிலானி, தணிகை ஆகியோர் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை மாணவி எஸ்.தர்சிதா வழங்கினார்.

வரவேற்புரையினை இலக்கண ஆசிரியர் வ.சாந்தன் வழங்கினார். தலைமையுரையினை நதியோர நாணல்கள் இலக்கிய அமைப்பின் தலைவர் வ.ஜசிந்தன் ஆற்றினார். அறிமுகவுரையினை சமுர்த்தி உத்தியோகத்தர் சி.சிறீதரன் ஆற்றினார். வெளியீட்டுரையினை நதியோர நாணல்கள் இலக்கிய அமைப்பின் செயலாளர் க.இராசமலர் ஆற்றினார்.

நூலினை யாழ்.பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை இலக்கிய ஆர்வலர் இ.நித்திலமணி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பங்கேற்றோர் நூற்பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

நூலின் ஆய்வுரையினை மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் ஆற்றினார். தொடர்ந்து சிறப்பு அதிதிகளான யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

யோ.புரட்சி, 'கற்பகக் காவலர்' அவுஸ்திரேலியா வாழ் க.நடராசா ஆகியோர் நூலாசிரியர் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நூலாசிரியருக்கான கெளரவிப்பினை அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாடு தலைவர் ஐ.எம்
சுரைஸ், நதியோர நாணல்கள் இலக்கிய அமைப்பினர் ஆகியோர் வழங்கினர்.

ஏற்புரையினை 'பகலில் காணும் கனவுகள்' நூலின் ஆசிரியர் வடவரணி சி.சபா வழங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பினை ஓய்வுநிலை அதிபர் சி.பவளேந்திரன் வழங்கியிருந்தார்.

வடவரணி சி.சபா அவர்களின் கவிதைகள் எளிமையானதும், நகைச்சுவை ததும்புவதும், ஆழமான சிந்தனைகள் பொதிந்ததுமாக காணப்படுவதை நோக்க முடிகிறது.













'பகலில் காணும் கனவுகள்' நூல் வெளியீட்டு விழா.... Reviewed by Author on November 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.