அண்மைய செய்திகள்

recent
-

சிறுவர்கள் விழுமியங்களை கற்றுக் கொள்ள வேண்டும்-மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் K.J.பிறட்லி




சமூக ஒற்றுமை, சமூகத்துக்குள்ளே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சுமூகமாகதீர்த்தல், பேசி தீர்த்ததல் இவ்வாறான பண்புகளும் எம் மத்தியில் மிகவும் குறைவாக இருந்து வருகின்றன. எதிர்காலத்தில் தலைவர்களாக பரினமிக்க இருக்கும் சிறுவர்களாகிய நீங்கள் இந்த பண்பாட்டு விழுமியங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் K.J.பிறட்லி இவ்வாறு தெரிவித்தார்.

உலக தரிசன நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்னார் நகர சபை மண்டபத்தில் சிறுவர் கழகங்களுக்கான :சிறுவர்களின் தைரியமான எதிர்காலம்' என்றதொணிப்பொருளில் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (22.11.2018)) நடைபெற்றது.

இவ் நிகழ்வில் விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட மன்னார் கல்வி வலயப்
பணிப்பாளர் K.J.பிறட்லி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்றைய இந்த நிகழ்வின் ஒரு முக்கியமான தொணிப்பொருளாக 'சிறுவர்களின் தைரியமான எதிர்காலம்' உங்களுடைய எதிர்காலத்தை தைரியமாக எதிர்கொள்வதற்காக தேவையான இரண்டு விடயங்களிலேயே கல்வி மற்றையது பண்பாடு. ஏனென்றால் நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டுமானால் இவ்விரண்டும் நமக்கு முக்கிய தேவையாக இருக்கின்றது.

எதிர்காலத்தில் எமக்கு இருக்கக்கூடிய சவால்கள் மிகவும் சிக்கலாகவும் மிக
ஆழமாகவும் அமைந்திருக்கும். இப்பொழுது இது தொடர்பாகவும் சுற்றாடல்
மாசடைவது தொடர்பாகவும் பேசப்படுகிறது அத்துடன் இது விடயமாக ஆய்வும் செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் சூழல் மாசடைவதால் ஏற்படும் விபரிதங்களை விழிப்பூட்டும் வகையில் ஒரு நிகழ்வை இவ் மேடையில் சிறுவர்களாகிய நீங்கள் அரங்கேற்றீனீர்கள்.

இதன் பரிமானம் மிகவும் ஆழமானது. ஏதிர்காலத்தில் எமது வளங்கள் குறிப்பாக குடி தண்ணீர் கூட தட்டுப்பாடு நிலவும் காலமாக அமையும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது.

இந்த வளங்கள் எல்லாம் எதிர்காலத்தில் அற்று போகும் நிலையில் இவற்றை மனித குலத்துக்கு தேவையானதை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனை, ஆய்வு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எல்லாம் உங்கள் கையிலேயே எதிர் காலம் தங்கியுள்ளது.

எதிர் காலத்தில் பல விதமான உயிரினங்கள் காலத்துக்கு காலம் அழிந்து போகும் நிலைகள் தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இயற்கையின் சூழல் மிகவும் மோசமாக பாதிப்பு அடையும் நிலை உருவாகும். இவ்வாறான நிலையில் மனித நிலைத்திருத்தல் ஒரு கேள்விக்குறியதாகும்.

இவற்றை எதிர்கொள்வதற்கு எதிர்கால அறிவும் ஆய்வும் இப்பொழுது சிறார்களாக இருக்கும் உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. உங்கள் கல்வி மேம்பாட்டுக்கு ஊடாக நீங்கள் உங்கள் பண்பாட்டு மூலமாகவும் குழுவாக இருந்து செயல்படுவதன் மூலமாகவும் இவ் பிரச்சனைகளுக்கு தீர்வை மேற்கொள்வதற்கும் சமூகமாக கூடி வாழ்வதற்கும் உங்கள் பண்பாட்டு விழுமியங்கள் மிகவும் அவசியம் என்பதை நாம் மறக்கலாகாது.

எமது மூதாதையர்கள் வழிகாட்டல்கள் நெறிமுறைகளை மிகவும் அழகாக வகுத்து தந்துள்ளனர். நீங்கள் செய்தித் தாள்களில் பார்ர்ப்பீர்கள் எமது பகுதியில் யாரோ ஒருவர் விடும் தவறுகளுக்கு தலைப்பிடுவார்கள் தமிழர் பண்பாடு சீறழிகின்றது என்று.

ஒருவர் விடும் தவறுதான் தமிழர்களின் ஒட்டு மொத்த கலாச்சாரமல்ல. எமது
பண்பாடு ஆழமானது. எமது உடை, உணவு, எங்களுடைய வணக்க முறைகள் இவற்றுக்கு அப்பால் நாம் சமூகமாக வாழும் நெறிமுறைகளும் எமது பண்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சமூக ஒற்றுமை, சமூகத்துக்குள்ளே இருக்கக்கூடிய பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்தல், பேசி தீர்த்ததல் இவ்வாறான பண்புகளும் இந்த பண்பாட்டுக்குள்
உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவைகள் கிழக்காசிய நாடுகளிள் மிகவும் விருத்தி அடைந்துள்ளன என
தெரிவிக்கின்றனர். சமூக ஒற்றுமை, சமூகத்துக்குள்ளே இருக்கக்கூடிய
பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்தல்,பேசி தீர்த்ததல் இவ்வாறான பண்புகளும்
எம் மத்தியில் மிகவும் குறைவாக இருந்து வருகின்றன.

எதிர்காலத்தில் தலைவர்களாக பரினமிக்க இருக்கும் நீங்கள் இந்த பண்பாட்டு
விழுமியங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிறுவர் கழகங்களை
அமைத்து உங்கள் ஒற்றுமையையும் பகிர்ந்து கொள்ளுதலையும் உங்களுக்குள் பிரச்சனைகள் தலைதூக்கும்போது நீங்கள் பேசி தீர்த்து கொள்ளும் ஒரு நல்ல பண்பாட்டை வளர்க்கும் ஒரு கழகமாக இதை உருவாக்கி செயல்படுத்தும் உலக தரிசன
நிறுவனத்துக்கு நன்றியையும் வாழ்துக்களையும் கூறி நிற்பதுடன்

எதிர்காலத்தில் சிறுவர்களாகிய நீங்கள் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல
பரந்துள்ள இவ் உலகம் முழுவதும் உங்கள் பண்பாட்டு நல்ல விழுமியங்கள்
கொண்டவர்கள் என போற்றும் பிரஜைகளாக திகழ வாழ்துக்கள் என தெரிவித்தார்.

சிறுவர்கள் விழுமியங்களை கற்றுக் கொள்ள வேண்டும்-மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் K.J.பிறட்லி Reviewed by Author on November 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.