அண்மைய செய்திகள்

recent
-

வல்லரசுகளின் கடும் கோபத்திற்குள்ளான மைத்திரி! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மேற்குலக நாடுகள் -


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த சந்திப்பை அவர்கள் புறக்கணித்துள்ளனர். புதிய வெளிவிவகார அமைச்சருடன் இந்த சந்திப்பு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அந்த பதவியில் நியமித்தமயினால் இலங்கை அரசியலில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான மேற்குலக நாடுகள் நாடாளுமன்றத்தை கூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்றம் யார் பிரதமர் என தீர்மானிக்கட்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.
அதற்கமைய எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்த ஜனாதிபதி திடீரென நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார்.
இவ்வாறான நிலையில் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம 43 நாடுகளின் பிரதிநிதிகளிற்கு அழைப்பை விடுத்திருந்தது. எனினும் மிக்குறைந்த அளவு வெளிநாட்டு தூதுவர்களே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா, கனடா, தென்ஆபிரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் 2ஆம் 3 ஆம் கட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் சார்பிலும் தூதுவர் ஒருவர் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை சீனா, பாகிஸ்தான், கியூபா உட்பட 20 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
உலக நாடுகள், இலங்கை மீது அதிக கவனத்தை செலுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பை அவர்கள் புறக்கணித்துள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதாக ரொய்ட்டர் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
வல்லரசுகளின் கடும் கோபத்திற்குள்ளான மைத்திரி! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மேற்குலக நாடுகள் - Reviewed by Author on November 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.