அண்மைய செய்திகள்

recent
-

மரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா,,,,,


பிறந்து ஓராண்டுக்குள் அபூர்வ வியாதியால் மரணமடையும் பிஞ்சு குழந்தைகளுக்காக சிறப்பு மருந்து ஒன்றை சுவிஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

குறித்த மருந்துக்கான அரசின் அனுமதி கோரி அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் Type I Spinal Muscular Atrophy எனப்படும் அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள் பிறக்கின்றன.
குறித்த நோயால் கடும் அவதிக்கு உள்ளாகும் அந்த குழந்தைகள் பிறந்து ஓராண்டுக்குள் மரணமடைந்தும் வருகின்றன.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் Novartis நிறுவனமானது அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும், அரசின் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஒருமுறை இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து 13 ஆண்டுகள் மரணத்தை தள்ளிப் போட முடியும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அரிய மருந்துக்கு 4 மில்லியன் பிராங்குகள் கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

ஆனால் சுவிஸ் அரசாங்கத்தை பொறுத்தமட்டில் எந்த அரியவகை மருந்தாக இருப்பினும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பிராங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என கடந்த 2011 ஆம் ஆண்டு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே உயிர் காக்கும் மருந்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்தலாம் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மேலும் சிகிச்சையின் வெற்றி தோல்விகளை பொறுத்து கட்டணம் வசூலிக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

ஒரு நிறுவனம் அளித்த காலக்கெடுவுக்குள் நோயாளி மரணமடைந்தால் மொத்த கட்டணத்தில் பாதியை செலுத்தலாம் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என சுகாதாரப் பொருளாதார வல்லுனரான Jérome Cosandey தெரிவித்துள்ளார்.

மரணத்தை தள்ளிப்போடும் மருந்தை கண்டுபிடித்த சுவிஸ் நிறுவனம்: விலை என்ன தெரியுமா,,,,, Reviewed by Author on November 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.