இலங்கை அணியின் புதிய கேப்டனாக மலிங்கா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தொடர்களிலும் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமல் கேப்டனாக செயல்பட உள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, வெலிங்டனில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20க்கான இலங்கை அணிக்கு, 35 வயதான லசித் மலிங்கா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி விபரம்
- லசித் மலிங்கா (கேப்டன்)
- நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் கீப்பர்)
- ஏஞ்சலோ மேத்யூஸ்
- தனுஷ்கா குணதிலக
- குசால் பெரேரா
- தினேஷ் சண்டிமல்
- அசில குணரத்னே
- குசால் மெண்டிஸ்
- தனஞ்செய டி சில்வா
- திசாரா பெரேரா
- தசன் ஷனகா
- லக்ஷண் சண்டகன்
- சீக்குஜ் பிரசன்னா
- தஷ்மன்தா சமீரா
- கசன் ரஜிதா
- நுவான் பிரதீப்
- லஹிரு குமார
இலங்கை அணியின் புதிய கேப்டனாக மலிங்கா நியமனம்!
Reviewed by Author
on
December 15, 2018
Rating:
No comments:
Post a Comment