அண்மைய செய்திகள்

recent
-

ஒரு குழந்தை….



ஒரு குழந்தை….

ஒரு குழந்தை என்றாலும் வேண்டும் என்னை அம்மா….. என்றும் உங்களை அப்பா….. என்றும் கூப்பிட இதுதான் காயத்திரி அதிகம் உச்சரிக்கும் வார்த்தை வார்த்தை மட்டமல்ல அவளின் வரமும் கூட யாராவது குழந்தை வைத்திருந்தாலோ…….. குழந்தை தொடர்பாக கதைத்தாலோ அங்கே ஆஐராகிவிடுவாள் அவளை அறியாமல்…. என்னங்க வாங்க புதிதாய் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் குழந்தைப்பேற்று நிபுணரைப்போய்ப்பார்ப்பம்  இப்படி பல நிபுணர்களை பார்த்து பார்த்து பல இலட்சங்களை கரைத்தது தான் மிச்சம் பலனேதும் இல்லை சலித்துக்கொண்டான் ஹரிஸ்….
இருப்பினும் மனைவியின் தொடர்தொல்லையால் அவனும் போகாத இடமும் இல்லை இந்த நிலையில்தான் பார்வதியம்மாள் சொன்னாள் சாமியார் ஒருவர் இருக்கின்றார். அவரைப்பார்தால் ஏதும் பலன் கிடைக்கும் சரி… சரி… அவரையும் போய்ப்பார்ப்பம்  அடுத்த நாளே காயத்திரியும் ஹரிஸ்சும் சாமியாரின் முன்னாள் அதுவும் சும்மா அல்ல இருநூறு நபர்களை கடந்து தான் போக வேண்டி நிலை அங்கு அவ்வளவு கூட்டம் இவர்களது உயர்பதவி இலகுவாக சாமியாரை காணக்கூடியதாக இருந்தது….

சாமியார் இருவரையும் பார்த்து சொல்லுங்கள் என்ன பிரச்சினை நான் வங்கி நிறைவேற்று முகாமையாளராகவும் எனது மனைவி தமிழ் பேராசிரியராகவும் உள்ளோம். நாங்கள் இருவரும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றது இன்னும் ஒரு குழந்தை கூட தங்கவில்லை பல வைத்தியர்களிடம் காட்டி சிகிச்சையினை மேற்கொண்டோம் எந்தப்பலனும் இல்லை சொத்து பணம் பட்டம் பதவி எல்லா வளமும் தந்த இறைவன்  இந்த பிள்ளைச்செல்வத்தினை மட்டும் தரவில்லை….
எத்தனை வயதில் திருமணம் நடந்தது எனக்கு 31 மனைவிக்கு 28 வயதில் அப்போது இருவரும் மேல் படிப்பு படித்துக்கொண்டு இருந்ததால் பிள்ளை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கவில்லை….தற்போது எல்லாம் உள்ளது பிள்ளைதான் இல்லை…. அந்தந்த விடையங்களை அந்தந்த நேரத்தில் தான் செய்யவேண்டும் பருவத்தில் பயிர் செய்தல் வேண்டும் என்று சொல்வார்கள் பெரியோர்கள்….அவர்களின் வார்த்தைகள் சும்மாவா…தற்போது பலரின் நிலை இதுதான் தங்களின் சுகத்திற்காகவும் உல்லாசத்திற்காகவும் திருமணம் செய்து கொள்கிறார்கள் தங்களுக்கு விரும்பிய நேரத்தில் தான் பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்கள் அதுவும் சமூதாயத்தின் பார்வையிலும் அவர்கள் வீசும் மோசமான கொடிய மலடன் மலடி வார்த்தைகளில்  இருந்து தப்பித்துக்கொள்ளவே…..
சரி சரி வாருங்கள் அமருங்கள் என்று சொன்ன சாமியார் கைகளை அவர்கள் மீது வைத்த ஏதோ மந்திரங்களை உச்சரித்தார் சிறிது நேரம் மௌனமானார்… அமைதிக்குபின் கண்ணைத்திறந்தார் ஆவலாய் இருவரும் சாமியார் முகத்தினை பார்க்கிறார்கள் அவர் சில ஆயிரங்களில் செலவுள்ள பரிகாரங்களை விபரித்தார்…. அப்படியே செய்கின்றோம் இன்னும் இரண்டு மாதங்களில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் கடவுளே நேரில் வந்து சொன்னது போல……
நவீனத்திடம் இருந்த நம்பிக்கை போனது தெய்வத்திடமும் பரிகாரங்களிடமும் பத்தியத்திலும் இறங்கினர். இருவரும் அந்த சாமியர சொன்னது போலவே இரண்டு மாதங்களில் மாசமானாள் காயத்தரி சந்தோஷம் கரைபுரண்டோடியது…. நாட்கள் வேகமாய் சுழன்றது. நிறைமாதக்கற்பினியாக பெறுமாதமும் நெருங்கியது பல்கலையில் விடுப்பும் எடுத்திருந்தாள் காயத்திரி அப்போதுதான்  ஹரிஸ்க்கு இரண்டு வாரம் கருத்தங்கிற்காக அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. சென்று வந்தால் பதவி உயர்வுடன் சம்பளமும் அதிகரிக்கும் அத்தோடு அப்படியான வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது அமெரிக்கா பயணமானான் ஹரிஸ்…

அவன் அங்கு சென்று இரண்டாம் நாள் பிறந்தாள் அழகிய தேவதையாக இந்தக்குழந்தை… வட்சப்பில் படங்களாகவும் வீடியோவாகவும் செய்திகள் பறந்தது…. மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டற்ற மகிழ்ச்சி…. பத்து வருடங்களுக்குபின் கிடைத்த முத்து…. இரண்டு வார கருத்தரங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு பதவி உயர்வு சம்பள அதிகரிப்பு எல்லாவற்ரையும் விட தனது சொத்து அந்த குழந்தையை காணும் ஆசையில் வரும் வேளையில் தான் அந்த கொடிய விமான விபத்து நிகழ்கின்றது அந்த விபத்தில் காணாமல் போகின்றான் ஹரிஸ் அச்செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது அதிர்ந்து போனாள்…!!! காயத்திரி….

அப்போது அங்கு வந்த சாமியார் அந்தக்குழந்தையைப்பார்த்து விட்டு இவளுடைய தகப்பன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை….!!! இந்தக்குழந்தை பிறந்த கிரகநிலை தகப்பன் வாழத்தகுதியற்றதாகிவிட்டது… சாமியாரின் வார்த்தையால் எல்லோரும் அதிர்ந்து போனார்கள்……!!!
நீண்ட காலத்திற்கு பின் பேர் சொல்ல பிறந்த குழந்தை…..மலடி என்ற சொல்லை மாற்றிய குழந்தை…. எல்லோருக்கும் செல்லமாக இருந்த குழந்தை….. சந்தோஷத்தினை அள்ளித்தந்த குழந்தை…. அந்த சாமியாரின் வார்த்தையால் அருவருக்கதக்க பொருளாய் தகப்பனை கொன்ற கொடிய குழந்தையாய்…அழிவின் சின்னமாய்….அத்தனைபேருக்கும் அக்குழந்தை குட்டி எமனாய்த்தான் தோன்றினாள்…அத்தோடு விட்டாரா அந்த சாமியார் இக்குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது தாய்க்கு…..என்று நிறுத்தி விட்டார்…சாமி…
ஒரு வருடங்கள் கழிந்தது குழந்தை வேண்டாவெறுப்பாக வளர்ந்தது காயத்திரியின் வாழ்க்கiயிலும் பல மாற்றங்கள் நிகழத்தான் செய்தன காயத்திரியோடு பணியாற்றும் பேராசிரியர் கலிஸ்ரன் தனது விருப்பத்தினை சொன்ன போது…இல்லை இல்லை என்னால் முடியாது நான் கலியாணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்னால் உங்களை மறுமணம் செய்து கொள்ள முடியாது….ஏன்….?ஏன்….?ஏன்….?

இந்த வாழ்க்கை வாழ்வதற்கு தான் இழந்தவைகளையும் இறந்த காலத்தினையும் எண்ணிக்கொண்டு இருந்தால் இருக்கின்ற காலத்தினை இழந்துவிடுவோம்……. பிறகு நடைபிணம் தான் வாழ்க்கை…உங்களின் நல்ல பதிலுக்காய் காத்திருக்கிறேன்….. சொல்லிவிட்டு சென்று விட்டான் கலிஸ்ரன்…
வீட்டிற்கு வந்தாள் வீட்டிலும் தாயினதும் வார்த்தைகள் இப்படியே இருந்து என்ன செய்யப்போகின்றாய்…. உன்னை நினைக்கும் போது எனக்கு…அழுது கொண்டே…ஊருல உலகத்தில நடக்காததா….
அவளுக புருஷன் இருக்கும் போதே இன்னொரு வாழ்க்கையை வாழ்கின்றார்கள் நீ என்னடி….நடந்தவற்றையே நினைத்துக்கொண்டிருந்தால் நீ நரகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கப்போகின்றாய்… நானும் இன்னும் சில காலம்தான்…நான் செல்லுறத சொல்லிற்றன் இனி நீ எடுக்கிற முடிவு…
காயத்திரியின் மனதில்….. கலிஸ்ரன் சென்ன வரிகளும் இந்த வாழ்க்கை வாழ்வதற்கு தான் இழந்தவைகளையும் இறந்த காலத்தினையும் எண்ணிக்கொண்டு இருந்தால் இருக்கின்ற காலத்தினை இழந்துவிடுவோம் பிறகு நடைபிணம் தான் வாழ்க்கை…

தாய் சொன்ன வரிகளும் நடந்தவற்றையே நினைத்துக்கொண்டிருந்தால் நீ நரகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கப்போகின்றாய்…
காயத்திரியின் கடந்த வாழ்க்கையை தோலுரித்தது மெல்ல மெல்ல மாறத்தொடங்கினாள்…. எத்தனையே காலம் தான் இப்படியே இருப்பது இந்த மாய உலகில் மனிதர்கள் குழந்தை இல்லாதபோது மலடி என்றார்கள்…இப்போது கணவன் இல்லை விதவை என்கின்றார்கள்….நாளை நான் மறுமணம் செய்து கொண்டால் பாருங்கடி இவளை….. புருஷன் இறந்து ஒரு வருடத்தில் மறுமணம் செய்துகொண்டாள் அவர்களது ஏளனப்பார்வைக்கும் இழிவான வார்த்தைகளுக்கும் எனது வாழ்வை தொலைப்பதா…?  எனது வாழ்வு எனது விருப்படியே என்னிடம் என்ன இல்லை….இறப்பதற்கு
தெளிவான முடிவினை எடுக்கும் தருணத்தில் குழந்தை அழுகின்றது வீரிட்டு அழுகின்றது பசியினால் போரிட்டு அழுகின்றது…..

அப்போதுதான் அவளுக்கு குழந்தையின் எண்ணம் வருகின்றது….திரும்பிப்பார்க்கிறாள்….. எனது குழந்தை எனது குழந்தை இக்குழந்தைக்காவது நான் வாழவேண்டும். ஏனக்கு ஏன் மறுமணம்…??? தேவையில்லை…. தேவையில்லை…. வாஞ்சையோடு வாரியனைக்கிறாள் நெஞ்சோடு தாய்மையுணர்வு பொங்ககியெழ…. ஆமா பொல்லாத குழந்தை  இது குழந்தை இல்லடி எமன்  இது உன்னோடு இருந்த உன்ர வாழ்வையும் சு10னியமாக்கிடும் கொண்டா இந்த குட்டிப்பிசாச…கோபத்தோடு பறித்துக்கொண்டு  குழந்தைகள் காப்பகத்திற்கு விரைந்தாள் காயத்திரியின் தாய் கனகாம்பாள்…..

ஆம் அந்தக்காப்பகம் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு முறைப்படி பதிவுசெய்து பாதுகதப்பான முறையில் குழந்தைகளை வழங்கும் காப்பகம். அது மட்டுமல்ல ஆண்களினதும் பெண்களினதும் முறையற்ற மோகத்தினால் பிறந்த குழந்தைகள் குப்பைத்தொட்டியிலும் அநாதரவாக விடப்படும் குழந்தைகளையும் உறைவிடமாய் திகழும் காப்பகம்தான் அது அங்கு வந்து சேர்ந்தத காயத்திரியின் குழந்தை காப்பகத்தின் எத்தனையாவது குழந்தையோ…!!!
ஏற்கனவே பதிவு செய்திருந்த குழந்தைப்பாக்கியம் இல்லாத பார்வதியிடம் சேர்ந்தது குழந்தை கல்யாணமாகி 15 வருடங்கள் கடந்தும் குழந்தைப்பாக்கியம் இல்லாமல் இருந்த பார்வதிக்கு
இக்குழந்தை வரப்பிரசாதமே…. வாரியனைத்தாள் வளர்த்தாள் இந்தக்குழந்தை வந்த அதிஸ்ரம் பார்வதி பத்தே மாதத்தில் ஆண்குழந்தையென்றைப்பெற்றெடுத்தால் பிறகென்ன இந்தக்குழந்தை மீது இருந்த பாசம் பரிவு எல்லாம் தனது செந்தக்குழந்தை மீதுதான் காக்கைக்கு தன்குஞ்சு பொன் குஞசு தானே மீண்டும் காப்பகம் வந்து சேர்ந்தது அந்தக்குழந்தை….இப்போது வயது இரண்டு….

மீண்டும் அக்குழந்தை பயணமாகின்றாள் ஒரு கிராமத்தின் வீட்டில் அந்தச்சாமியார் அந்தக்குழந்தையை பலியிட முனைகின்றார்….காயத்திரியின் கலியாண தோஷத்திற்காய்…..

கலைச்செம்மல் வை.கஜேந்திரன்
"மறுபிறப்பு" சிறுகதை தொகுப்பில் இருந்து.

ஒரு குழந்தை…. Reviewed by Author on December 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.