அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரஜைகள் குழு சந்திப்பு----ஒரு வார விடுமுறையில் வீட்டுக்கு வந்த அரசியல் கைதி-

வெளிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக இருந்து வரும் கிளிநொச்சி மாவட்டத்தின் புளியங்குளம் என்னும் இடத்தைச் சேர்ந்த நவரத்தின ராஜா றஞ்சித் (வயது 35) என்பவர் ஒரு வார விடுமறையில் நல்லினக்கத்தின் அடிப்படையில் வீட்டுக்கு கடந்த 30 ந் திகதி அனுப்பப்பட்டிருந்தார்.

பதினொரு வருடங்களாக சிறைச்சாலையில் அரசியல் கைதியாக இருக்கும் நான் முதல்முதலாக நல்லிணக்க அடிப்படையில் ஒரு வார விடுமுறையில் வீட்டுக்குவந்திருப்பது தனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கின்றது. நான்
சிறைச்சாலையில் இருக்கும் காலத்தில் நல்ல மதிப்பை பெற்றிருப்பதாலேயே
என்னை ஒரு வாரத்துக்கு வீட்டுக்குச் சென்றுவர அனுமதித்திருக்கலாம் என
அரசியல் கைதி ஒருவரை மன்னார் மாவட்ட பிரஜைகள்  குழு ஆளுனர் சபையினர் சந்தித்தபோது இவ்வாறாக தெரிவித்தார்.

இவரின் விடுதலைக்கு மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு கவனம் செலுத்தி வந்த நிலையிலேயே இவரின் வருகை இருந்துள்ளது. இவர் ஒரு வார விடுமுறையில் தனது குடும்பத்தாரைச் சந்திப்பதற்கு வந்திருந்ததைக் கேள்விப்பட்டதும் மன்னார் மாவட்ட பிரஜைகள்  குழு ஆளுநர் சபையினர் இவரை அவரின் வீட்டுக்குச் சென்று ஆறுதலின் நிமித்தம் சந்தித்தனர்.
விடுதலை புலிகளின் இயக்கத்தில் இணைந்திருந்தபொழுது 2007ம் ஆண்டு படகு ஒன்றின் மூலம் மாலை தீவுக்குச் சென்றபொழுது அங்கு தன்னுடன் மூவர் கைது செய்யப்பட்டிருந்தோம்.

பின் 2014 ஆம் ஆண்டு தங்களை மாலைதீவு அரசாங்கம் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பியதுடன் எங்களை அன்று முதல் வெளிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக வைத்துள்ளனர்.

எங்களுக்கான விசாரனைகள் முடிவுற்ற நிலையில் 2020 ஆம் ஆண்டு
விடுவிப்பதற்கான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நான் ஒரு
வார விடுமுறையில் வீட்டுக்குச் சென்று வரலாம் என தெரிவித்து கையில் ஒரு படிவத்தையும் தந்து ஏழு நாட்களுக்குள் வவுனியா சிறைச்சாலைக் கூடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட தினத்துக்கு முன் மீண்டும் இவ்விடத்துக்கு வர வேண்டும் என தெரிவித்தே தன்னை அனுப்பியுள்ளதாக பிரஜைகள்  குழு வினவியபோது...? இவ் நபர் பிரஜைகள்  குழு பிரதிநிதிகளிடம் இவ்வாறு தெரிவித்தார்.

எனது 11 வருட சிறை வாழ்க்கையில் இதுவே எனது வீட்டுக்கு வருவதற்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் எனவும் சிறைச்சாலையில் நன்றாக கவனித்தாலும் சரி கவனிக்காவிட்டாலும் சரி வீட்டாருடன் இருப்பது போலாகுமா...? என தெரிவத்த அவர் எனது தாய் தந்தையை நானே கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றேன்.

எனது குடும்பத்தில் நானும் தந்தையும் அம்மாவும் மட்டுமே. எனது அம்மா
அப்பா வயது முதிர்ந்தவர்கள். எனது பெற்றோருக்கு காணி வீடு ஒன்றும்
கிடையாது. ஒரு தனவந்தரின் பாலடைந்த வீட்டை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நான் விடுதலையாகு வரைக்கும் பெற்றோருக்கு வழங்கியுள்ளார்.

அப்பாவுக்கு முதியோருக்கான பணம் 2000 ரூபாவும் ஐ.சீ.ஆர்.சீ. 5000
ரூபாவும் வழங்கி வருகின்றது. இதைக் கொண்டே எனது பெற்றோர் தங்கள் காலத்தை போக்கி வருகின்றனர் என்றார்.

பதினொரு வருடங்களுக்கு பின் நான் எனது உறவுகளுடன் ஒன்றித்து மகிழ்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உதவிய அனைத்தவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

மன்னார் பிரஜைகள்  குழுவினரும் அவருக்கும் அவரின் பெற்றோருக்கும் ஆறுதல்தெரிவித்தனர்.





மன்னார் பிரஜைகள் குழு சந்திப்பு----ஒரு வார விடுமுறையில் வீட்டுக்கு வந்த அரசியல் கைதி- Reviewed by Author on December 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.