அண்மைய செய்திகள்

recent
-

மெக்சிக்கோ நாட்டை பற்றி தெரிந்து கொள்ள ..........


மெக்சிக்கோ வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும்.

இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது.
தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது.

1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு.
அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடு என்றழைக்ப்படுகின்றது.
அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன.
113 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குகின்றது.
மெக்சிக்கோ என்ற பொருள் வரக்காரணம்?
"மெஹிகோ" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது.
இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது.
இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது.
மெக்சிக்கோ நாட்டின் கொடி?

மெக்சிக்கோ நாட்டின் சின்னம்?

துணைக்கண்டம்: வட அமெரிக்கா
மெக்சிக்கோ நாட்டின் நாட்டின் நாட்டுப்பண்? ஹிம்ணோ நாசியொனால் மெஹிகானோ
மெக்சிக்கோ நாட்டின் தலைநகர்? மெக்சிகோ நகரம்

மெக்சிக்கோ நாட்டின் நாணயம்? மெக்சிகோ பீசோ (MXN)

அழைப்புக்குறி? 52
இணையக் குறி ? .mx
மெக்சிக்கோ நாட்டின் நிர்வாகப் பிரிவுகள் வரைப்படம்

தொலைபேசி குறியீடு: +52
மெக்சிக்கோ நாட்டின் தேசிய உணவு ? Mole sauce

மெக்சிக்கோ நாட்டின் தேசிய மலர்? Dahlia pinnata


மெக்சிக்கோ நாட்டை பற்றி தெரிந்து கொள்ள .......... Reviewed by Author on December 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.