அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இளைஞர் அபிவிருத்தித் திட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு அதிகம் ஏற்படும் கிரமங்களாக  அடையாளம் காணப்பட்ட ஜிம்ரோன் நகர் மற்றும் சாந்திபுரம் ஆகிய இரு பகுதிகளை மையப்படுத்தி இரண்டு கிராமங்களையும் பிரதான பாதையுடன் இணைப்பதற்கான பாலம் அமைக்கும் பணியானது தேசிய இளைஞர்  சேவை மன்றத்தின் மன்னார் மாவட்ட தேசிய பிரதிநிதி ஜோசப் நயன் தலைமையில் 18-12-2018 செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றது.

சுமார் 5 வருடங்களுக்கு மேல் இவ் கிராம மக்கள் டயர்களினாலும், சிறிய போக்குகளினாலும் பாலங்களை அமைத்து பல்வேறு சிரமத்தின் மத்தியில் போக்குவரத்தினை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர்  சேவை மன்றத்தின்   நிதி ஒதுக்கிட்டின் கீழ் குறித்த பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 18-12-2018 செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றது.

குறித்த பகுதியில் காணப்படும் கால்வாயானது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. வருடத்தில் 8 மாதங்கள் நீரினால் கால்வாய் நிரம்பி காணப்படுவதனால் குறித்த கால்வாயினை கடப்பதற்கு பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி வருவதனாலும் அக்கால்வாய்க்கு அருகாமையில் பாடசாலை காணப்படுவதினாலும், மாணவர்களின் நலனை கருதில் கொண்டும் சாந்திபுரம் இளைஞர் கழகமும் இணைந்து குறித்த வேலைத் திட்டத்தினை நடை முறைபடுத்தி வருகின்றனர்.

குறித்த  கிராமத்தில் அடிக்கடி வெள்ளப்பதிப்புகள் ஏற்படுவதும் கடல் நீர் உட்புகும் ஆபத்தும் உடைய கிராமம் என்பது குறிப்பிடதக்கது.









மன்னாரில் இளைஞர் அபிவிருத்தித் திட்ட வேலைத்திட்டம் ஆரம்பம்-படங்கள் Reviewed by Author on December 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.