அண்மைய செய்திகள்

recent
-

அலரி மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறிய ஐக்கிய தேசிய கட்சியினர்! -


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பிரதமராக ரணிலை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி கொண்டுவரவுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ரணிலை ஒருபோதும் பிரதமர் பதவிக்கு நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, பிரதமராக ரணிலை நியமிக்கக் கோரி ஐக்கிய தேசிய முன்னணி நாளைய தினம் நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளது.

இந்நிலையிலேயே, இன்று இரவு ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் அலரி மாளிகையில் இன்று இரவு இடம்பெற்றிருந்தது.
இதன் போது முக்கிய பல விடயங்கள் பேசப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானதை தொடர்ந்து அலரி மாளிகை வளாகத்தில் ஊடகவியலாளர்கள் கூடியிருந்தனர்.

எனினும், ஊடகங்கள் எதற்கும் கருத்து தெரிவிக்காது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அலரி மாளிகையில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அலரி மாளிகையை விட்டு அமைதியாக வெளியேறிய ஐக்கிய தேசிய கட்சியினர்! - Reviewed by Author on December 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.