அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மாற்றுதிறனாளிகளின் பிள்ளைகளான 55 மாணவர்களுக்கு-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ,மற்றும் மாற்றுதிறனாளிகளின் பிளளைகளான 55 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் இன்று 14-01-2019 மாலை 3:00 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக JICA  மண்டபத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.C.A.மோகன் ராஸ் அவர்கள் தலைமையில் மன்னார் துளிர் உதவும் கரங்கள் ஒழுங்கமைப்பில்  மன்னார் தேனீ மாற்றுத்திறனாளிகள் அமைப்பினருடன் இணைந்து
விருந்தினர்களாக......
திரு.ஜெபநேசன் - மாவட்ட கணக்காய்வாளர் அவர்களும்
திருமதி .GMT.லியோன்-சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும்,                               
திரு .Er.விமலேஸ்வரன் -அகில இலங்கை பொறியியலாளர் மேளனம் மன்னார் கிளை தலைவர் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்
திரு.El.லக்சன்- மொடன் விசன் கேர் உரிமையாளர் அவர்களும்,       
அருட் தந்தை .நேரு அடிகளார் அவர்களும்,
திரு .ஜீவன் - நாணாட்டான் பிரதேச சபை உறுப்பினர் அவர்களும் .                           தேனீ மாற்றுதிறனாளிகள் அமைப்பு மன்னார் .                           
திருமதி .N.சுகந்தி-தலைவர் அவர்களும்     
திருமதி .SM.கொன்சலிட்டா- உப செயலாளர் அவர்களும், செல்வி.M,வினோதினி-உறப்பினர் அவர்களும் ,மன்னார் துளிர் உதவும் கரங்கள்  அதன் தலைவர் திரு .மனோகிரிதரன்- அவர்களும் மாணவர்களுக்கான கல்வி உதவியினை வழங்கி வைத்தனர்.

இவ்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் பெற்றோர்கள் ,மாணவர்கள் ,மாவட்ட  செயலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகளை திரு .விமலேஸ்வரனும் புத்தகப்பைகளினை  திரு.லக்சன் அவர்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

திரு .Er.விமலேஸ்வரன் அவர்களால் ஆண்டு தோறும் இலவசமாக வெளியிட்டு வழங்கப்படுகின்ற  கணித க.பொ.த சாதாரணதரம் பயிற்ச்சி புத்தகங்கள் இம்முறையும் எல்லா பாடசாலைகளுக்கும் வழங்கும் விதமாக இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.C.A.மோகன் ராஸ்அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 -வை.கஜேந்திரன்-

























மாற்றுத்திறனாளிகள்,மற்றும் மாற்றுதிறனாளிகளின் பிள்ளைகளான 55 மாணவர்களுக்கு-படங்கள் Reviewed by Author on January 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.