அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மாதிரி மனித எலும்புக்கூடுகள் விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டது

மன்னார் நகரில் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் மீட்கப்பட்டமாதிரி மனித எலும்புக்கூடுகள் அமெரிக்கா புளோரிடாவுக்கு காபன்பரிசோதனைக்காக இன்று புதன் கிழமை (23.01.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றிலிருந்து மிகவும் பாதுகாப்பான முறையில் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மன்னார் நீதிமன்ற கட்டளைக்கமைய இன்று (23) எடுத்துச் செல்லப்பட்ட குறித்த  மனித மாதிரி எலும்புக்கூடுகள் ஒரு சிறிய பெட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டு பி.232/18 என இலக்கமிடப்பட்ட நிலையில் இவ் பொதி பொலிஸ் வாகனம் ஒன்றில் இன்று காலை 10 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.

இவ் பொதியானது மன்னார் நீதிமன்ற சான்று பொருட்கள் காப்பாளர் பொறுப்பில் மற்றும் அவரின் உதவியாளர் ஒருவரும் இத்துடன் ஒரு பொலிஸ் அதிகாரியின் தலைமையில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பில் இவ் பொதி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இவ் பொதியானது நேரடியாக
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதைகுழி அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஐபக்சவிடம் விமான நிலையத்தில் வைத்து கையளிப்பதற்கான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ் பொதியானது நாளை (24) அதிகாலை கட்டார் எயார் விமானத்தின் மூலம்

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இவ் மாதிரி எலும்புக்கூடு அடங்கிய பொதி சட்டவைத்திய நிபுணர் சமிந்த
ராஐபக்சவின் பொறுப்பிலே எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த 17 ந் திகதி
 காணாமல் ஆக்கப்பட்ட  உறவினர்கள் சார்பாக ஆஐராகிவரும் சட்டத்தரணிகள் நகர்வு

பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து புளோரிடாவில் காபன் பரிசோதனைக்கு
உட்படுத்தும்போது அவற்றை அவதானிப்பதற்கும் இடையூருகள் கட்டுக்காவலை உறுதிப்படுத்துவதற்கும் காணமல் போனோர் சார்பாக ஒருவர் செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்கள்.

இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பில் ஆஐராகிய சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்டத்தரனி ஒருவரும், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக பணிப்பாளர் ஒருவருமாக நான்கு பேர் இவ் பொதியுடன் செல்வதும் குறிப்பிடத்தக்கது.

இவ் மன்னார் சதொச மனித புதைகுழி கடந்த வருடம் 2018 மார்ச் மாதம் சதொச
விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டு பிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது



(படம்) மன்னார் நீதிமன்றிலிருந்து கொழும்பு விமான நிலையத்துக்கு
எடுத்துச்செல்ல பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்படுவதையே படத்தில்
காண்கின்றீர்கள்.




மன்னாரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மாதிரி மனித எலும்புக்கூடுகள் விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டது Reviewed by Author on January 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.