அண்மைய செய்திகள்

recent
-

நான் முட்டாள்களையும், இனவாதிகளையும் கணக்கில் எடுப்பதில்லை.-மடுவில் அமைச்சர் மனோ கணேசன்-படங்கள்

அரசுடன் இணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் செயல்படுகின்றமைக்கு நாட்டில் ஏற்பட்ட அரசியல் விபத்தினாலேயே இந்த நல்ல காரியம் இடம் பெற்றுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மடு பிரதேசச் செயலகத்தில் இன்று புதன் கிழமை (23) மதியம் இடம் பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை ஆற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,

நான் முட்டாள்களையும், இனவாதிகளையும் கணக்கில் எடுப்பதில்லை. யார் என்னை போற்றினாலும்,தூற்றினாலும் எனது மனச்சாட்சிக்கு அமைவாகவே செயற்படுகின்றேன்.

-மனச்சாச்சி எனக்கு வாழி காட்டிக்கொண்டிருக்கின்றது.வாழ்க்கை வழி காட்டுகின்றது. அந்த அடிப்படையிலே செயல்படுகின்றறேன்.

இந்த நாட்டிலே   58 நாட்களின் பின் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 அரசியல் விபத்தாக இருந்தாலும் கூட விபத்தினால் நல்ல காரியங்களும் இடம் பெற்றுள்ளது.

'நாரதர் கழகம் நல்லதில் முடியும்' என்பது போல இந்த கழகம் செய்த நாரதர் சில நல்ல விடையங்களையும் வித்திட்டுள்ளார்.
-அதன் காரணத்தினாலேயே இப்பொழுது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாத்திரம் அதிகரித்துள்ளது.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்து செயல்படுகின்றார்கள். அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

எவர் கவனமாக இல்லாது விட்டாலும் நான் கவனமாக இருக்கின்றேன்.

மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக வட கிழக்கில் வாழக்கூடிய மக்கள் எனது இரத்தத்தின் இரத்தங்கள்.என் உடன் பிறப்புக்கள்.எனது மக்கள் என்ற உணர்வு எனக்கு இருக்கின்றது.

இந்த அரசியல் விபத்து எனது அமைச்சிற்கும் நல்ல பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

-கடந்த காலங்களை விட அதிகமான பொறுப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

உற்கட்;டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்து விவகார பொறுப்பும் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.எனவே வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதி நிதிகளுடன் இணைந்து பல்வேறு வேளைத்திட்டங்களை மேற்கொள்ளுவோம்.என தெரிவித்தார்.

இதன் போது மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட 50 பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மடு திருத்தலத்திற்கு சென்று மடு பரிபாலகரை சந்தித்ததோடு, மடு அன்னையை தரிசித்து ஆசி பெற்றார்.

அதனை தொடர்ந்து மன்னாருக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு மக்கள் அமோக வரவேற்பலித்தனர்.

-மன்னார் நகர மண்டபத்தில் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான் மற்றும் முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 198 பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள்,பொது மக்கள்,பயணாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












நான் முட்டாள்களையும், இனவாதிகளையும் கணக்கில் எடுப்பதில்லை.-மடுவில் அமைச்சர் மனோ கணேசன்-படங்கள் Reviewed by Author on January 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.