அண்மைய செய்திகள்

recent
-

மூல நோய் இயற்கையாகவே குணப்படுத்த வேண்டுமா?


தற்போது பலரும் சந்திக்கு பிரச்சினைகளில் மூலநோயும் ஒன்றாகும்.
மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.
இவை ஏற்பட்டுள்ள இடம், தீவிரத்தன்மை, மோசமாகும் தன்மை கொண்டு வேறுபடும். அதில் பெரும்பாலும் இரண்டு வகைகளால் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை இதற்கு முக்கிய அறிகுறிகளாகும்.
இதற்கு கண்ட கண்ட கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி உட்கொள்ளமால் இதை இயற்கை முறையில் எப்படி குறைப்பது என்று பார்ப்போம்.
  • ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் அவ்விடத்தை ஒத்தனம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
  • கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, அதனை மெதுவாக ஆசனவாயில் தடவ வேண்டும். ஆரம்பத்தில் எரிய ஆரம்பித்தாலும், கடுமையான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்.
  • சிறிது காட்டனை எடுத்து, அதனை பாதாம் எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
  • தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் குடித்து வந்தால், அவை வீக்கத்தை குறைப்பதோடு, அதில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால், ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும்.
  • தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளதால் இவற்றை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும். ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு பலமுறை தடவி வர வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
  • டீ பேக்கை சுடுநீரில் ஊற வைத்து, அதனை லேசாக குளிர வைத்து, பின் பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்து வருவது நல்லது. இல்லையெனில், டீ பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
  • உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும்.

மூல நோய் இயற்கையாகவே குணப்படுத்த வேண்டுமா? Reviewed by Author on January 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.