அண்மைய செய்திகள்

recent
-

அஞ்சலக வளர்ச்சிக்கு உப தபால் அதிபர்களின் பொறுப்பு மிக முக்கியமானது- தபால் அத்தியட்சகர் சி.அருள்செல்வம்

ஒரு அஞ்சலகத்தின் முதுகெழும்பு தபாலோடிகள். அடுத்து இருப்பவர்கள் உப
தபால் அதிபர்கள்தான். தபால் திணைக்களம் தற்பொழுது வேறொரு பரிமாணத்துக்குசெல்ல முடியாது இருப்பதற்கு காரணம் தபால் அதிபர்கள்தான். அத்துடன் கிராமங்களின் நிலையான எஐமானர்களாக காணப்படுபவதால் அஞ்சலக வளர்ச்சிக்கு உப தபால் அதிபர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பது மறுக்க முடியாது என மன்னார் பிராந்திய தபால் அத்தியட்சகள் சி.அருள்செல்வம் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அகில இலங்கை தமிழ் பேசும் உப தபால் அதிபர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (20) மன்னார் அஹாப்பே உணவு விடுதி மண்டபத்தில் முன்னாள் தலைவர் L.J.வாஸ் கூஞ்ஞ தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் பிராந்திய தபால்
அத்தியட்சகள் சி.அருள்செல்வம் இங்கு தொடர்ந்து பேசுகையில்

நான் இரண்டாம் தர தபால் அதிபராக இருந்து எனது முயற்சியின் காரணமாக பலபதவி உயர்வுகள் பெற்று தற்பொழுது மன்னாருக்கு ஒரு பிரதேச தபால்
அத்தியட்சகராக வந்திருக்கின்றேன்.

நான் ஏன் உங்களுக்கு இதை இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன் என்றால் உப
தபால் அதிபர்கள் ஒரு ஓய்வூதிய அரச அதிகாரிகளாக உள்வாங்கப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் எதிர்காலத்தில் தபால் அதிபர்களாக மாத்திரம் அல்ல ஏனைய
பதவிகளுக்கும் போட்டி பரீட்சைகள் மூலம் முன்னேறிச் செல்லக்கூடிய
வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அஞ்சல் திணைக்களத்தைப் பொறுத்தமட்டில் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எதாவது இருக்குமாகில் நிச்சயம் என்னால் முடிந்தளவு செய்து தருவேன்.

அதேநேரத்தில் உங்களுக்குரிய பொறுப்புக்கள் என்னவென்பது நான் உங்களுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. இந்த பொறுப்புக்களை கையாளும்போது உங்களுக்கு எதாவது தடையாக காணப்படுமாகில் அவைகளை நிவர்த்தி செய்து தருவதே எனது பாரிய கடமை என்பதை நான் இந்நேரத்தில் மீண்டும் உங்களுக்கு
தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

தற்பொழுது உங்கள் கடமைகளின்போது நீங்கள் எதிர்நோக்கும் ஒரு சில
பிரச்சனைகளை எனக்கு தெரியப்படுத்தினீர்கள். நிச்சயம் நான் அவற்றை எனது கவனத்துக்கு எடுத்துள்ளேன்.

ஒரு அஞ்சலகத்தின் முதுகெழும்பு தபாலோடிகள். அடுத்து இருப்பவர்கள் உப
தபால் அதிபர்கள்தான். தபால் திணைக்களம் தற்பொழுது வேறொரு பரிமாணத்துக்கு செல்ல முடியாது இருப்பதற்கு காரணம் தபால் அதிபர்கள்தான்.

எமது வளையமைப்பு மிக பெரியது. நாட்டில் 3410 உப தபாலகங்கள்
காணப்படுகின்றன. ஒரு வளையமைப்பு இல்லாது போனாலும் மக்கள் சேவை இல்லாது போகும் நிலை தோன்றும். இதனால்தான் அரசுகூட இவற்றை மாற்றுவதற்கான முயற்சிகளை கைவிட்டு வரும் நிலை காணப்படுகின்றது.

4691 தபால் அஞ்சலகம், முகவர் அஞ்சலகங்கள் மற்றும் உப அஞ்சல் அலுவலகம் எமது நாட்டில் காணப்பட்டாலும் இதில் அதிகமாக கிராமங்கள் தோறும் மக்களுக்கு அதிகமான சேவைகளை செய்து வருவது உப அஞ்சல் அதிபர்கள்தான்.

இதிலிருந்து எமக்கு புரிகின்றது கிராமங்களில் மக்களுடன் மிக நெறுக்கமாக
இருந்து சேவை புரிவது உப அஞ்சல் அதிபர்கள்தான் என்பதை மறுக்க முடியாது.

ஒரு பகுதிக்கு அஞ்சல் அத்தியட்சகராக இருக்கலாம் அல்லது தபால்
அதிபர்களாகவோ அல்லது தபால் திணைக்கள உத்தியோகத்தர்களாகவோ இருக்கலாம். இவர்கள் காலத்துக்குக் காலம் ஒரு இடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு மாற்றம் பெற்று சென்று விடுவர்.

ஆனால் உப தபால் அதிபர்களாகிய நீங்கள் அப்படியல்ல. உங்கள் பதவி காலம்
முழுதும் குறிப்பிட்ட அந்த கிராமத்திலே அல்லது பகுதியிலே தங்கள் கடமைகளை
மேற்கொண்டு அந்த பகுதியில் ஒரு எஐமானராக இருக்கின்றீர்கள்.

ஆகவே நீங்கள் உங்கள் குடும்ப வளர்ச்சியைப்போன்று அஞ்சல் குடும்பத்தின்
வளர்ச்சியிலும் உங்கள் முழுக் கவனம் இருக்க வேண்டும் என இந்நேரத்தில்
நான் உங்களுக்கு தெரிவித்து நிற்கின்றேன்.

சட்டப் புத்தகம் மனிதனுக்கே. ஓவ்வொருவரும் மனித நேயத்துடன் தங்கள்
கடமைகளை செய்வார்களானால் சட்டப் புத்தகத்தை நாம் பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது.

நாம் எமது அஞ்சலகத்தை உயர்வு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற மனப்பாங்குடன் இருந்து செயல்பட வேண்டும்.

அதைவிடுத்து நான் பெரியவன் நீ சிறியவன் என்ற மனப்பாங்கை தூக்கி
எறிந்துவிட்டு நாம் ஒன்றுபட்டு எமது அஞ்சலக திணைக்களத்தை உயர்வுக்கு
மட்டும் கொண்டுவராமல் மக்களுக்கும் சிறந்த சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது உரையின்போது கேட்டுக் கொண்டார்.
 









அஞ்சலக வளர்ச்சிக்கு உப தபால் அதிபர்களின் பொறுப்பு மிக முக்கியமானது- தபால் அத்தியட்சகர் சி.அருள்செல்வம் Reviewed by Author on January 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.