அண்மைய செய்திகள்

recent
-

16 வயதில் பிச்சையெடுத்து பிரித்தானியா சிறுமி! இன்று கோடி கோடியாக சம்பாதிக்கும் ஆச்சரியம் -


பிரித்தானியாவில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தெருவில் பிச்சையெடுத்து சாப்பிட்ட 16 வயது சிறுமி, இன்று தன்னுடைய 33 வயதில் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு மிகப் பெரிய தொழிலபதிராக மாறியுள்ளார்.
பிரித்தானியாவின் யார்க்‌ஷயரில் இருக்கும் Harrogate பகுதியைச் சேர்ந்தவர் Jem Henderson. 33 வயதான இவர் இன்று வருடத்திற்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு மிகப் பெரிய தொழிலபதிபராக வளர்ந்திருக்கலாம், ஆனால் இவர் தன்னுடைய சிறு வயதில் அனுபவித்த துன்பம், இந்தளவிற்கு அவர் பெரிய தொழிலதிபராக வளர்ந்தது எப்படி என்பதை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று விளக்கியுள்ளது.
அனைவருக்கும் தங்களுடைய டீன் வயது தான் மிக முக்கியமான வயது, அந்த வயதை நாம் வெற்றிகரமாக கடந்துவிட்டால், அதன் பின் நம் வாழ்க்கை எப்போதும் பிரகாசமாக இருக்கும்.

அந்த வகையில் Jem Henderson தன்னுடைய 16 வயதில் வீட்டை வீட்டு தாயின் தொந்தரவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
Personality disorder மற்றும் மன அழுத்தப் பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியே வந்த இவர், தெருக்களில் தஞ்சமடைந்துள்ளார். அதன் பின் உணவிற்காக பிச்சை எடுப்பது, அங்கேயே தூங்குவது என்று இருந்துள்ளார்.
அதன் பின் இவருடைய தாத்தா பாட்டி ஒரு கட்டம் வரை உதவியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஹாஸ்டல் ஒன்றில் தங்கி வந்துள்ளார். அந்த ஹாஸ்டலில் தங்க வேண்டும் என்றால் மாதம் 90 பவுண்ட் வாடகை செலுத்த வேண்டும்.

இதனால் தன்னுடைய 19 வயதில் வாழ்க்கையை பற்றி யோசித்த போது அவருடைய தாத்தா-பாட்டி அந்த நேரத்திலும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
அவர்கள் மூலம் படிப்பதற்கு லோன் வாங்கிய இவர். BA in English Literature மற்றும் MA-பிரிவில்Creative Writing என்று இரண்டு டிகிரிகளை வெற்றிகரமாக படித்து முடித்தார். இதை தன்னுடைய 19 முதல் 25 வயதிற்குள் முடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து copywriter வேலைக்கு சேர்ந்த இவர் இரண்டு வருடங்கள் அதில் வேலை செய்து வந்துள்ளார். அதை நன்றாக தெரிந்து கொண்டதால் 2013-ஆம் ஆண்டு copywriting தொழில் துவங்கியுள்ளார்.

இதை செய்து கொண்டிருக்கும் போதே மற்றொன்றாக கோ வொர்க்கிங் ஸ்பேஸஸ் என்ற தொழிலையும் செய்துள்ளார். அதாவது தனியாக வீட்டில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள்(freelancers) அங்கு வந்து தங்கள் தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்தி அதற்கு ஏற்ற தொகையை செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.
இதற்காக அந்த அறையில் 25 சேர்கள், டீ மற்றும் காபி போன்றவைகள் எந்த நேரமும் கிடைக்கும் வகையில் வசதி செய்துள்ளார்.
இப்படி ஒரு ஐடியா அவருக்கு வருவதற்கு முக்கிய காரணம், அவரும் வீட்டில் ஆறு வருடங்கள் தனியாகவே வேலை செய்து வந்துள்ளார். வீட்டில் ஒரு கோல்டர் பிஸ் மட்டுமே இருக்கும், அதனுடன் மட்டுமே பேசுவார்.

அதை மையாக வைத்தே இந்த தொழில் மற்றும் copywriting தொழிலை செய்து வந்துள்ளார். இந்த தொழிலுக்காக முதலில் 25,000 பவுண்ட் லோன் வாங்கிய இவர், இன்று வருடத்திற்கு 100,000 பவுண்ட(இலங்கை மதிப்பில் 2,29,97,193 கோடி ரூபாய்) சம்பாதிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.
தற்போது இதைத் தொடர்ந்து இவர் இதைத் தவிர இன்னும் சில தொழில்கள் செய்து வருவதாகவும், அதிலும் சாதித்து வருவதாக கூறப்படுகிறது.


16 வயதில் பிச்சையெடுத்து பிரித்தானியா சிறுமி! இன்று கோடி கோடியாக சம்பாதிக்கும் ஆச்சரியம் - Reviewed by Author on February 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.