அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2017ம் ஆண்டுகா.பொ.த.சாதாரனதர கணிதப்பிரிவில் முதல் நிலை பெற்ற தலைமன்னார் புனித லோறன்சியார் பாடசாலையில் கணிதஆசிரியர் இல்லை...


தலைமன்னார் புனித லோறன்சியார் பாடசாலை ஒருபழைமையான பாடசாலையாகும். இங்கு 280க்கு மேற்பட்டமாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். கடந்த 1990ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் இப்பாடசாலை பல சோதனைகளையும் சிலசாதனைகளையும் கண்டுள்ளது.
பலமக்கள் இடம்பெயர்ந்து இந்தியாமற்றும் ஏனைய இடங்களுக்கு இடம்பெயர்ந்துசென்று இப்போது இக்கிராமமக்கள் அனைவரும் தமதுசொந்தஊரில் ஒன்றுகூடிவாழ்ந்துவருகின்றனர். இம் மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்திசெய்வது இப்பாடசாலையாகும்.

மேற்படிபாடசாலைகல்விநிலையில் ஆரம்பகாலங்களில் பின் தங்கியநிலையில் காணப்பட்டஒருபாடசாலையாகும். இதனால் பலமாணவர்கள் பலகிராமங்களுக்கு இடம் பெயர்ந்துசென்றுதமதுகற்றல் செயற்பாட்டினைமேற்கொண்டுவந்தனர்.
இருந்தும்கிராமத்தின்மீதுபற்றுக்கொண்டமாணவர்கள் தமதுகல்விச் செயற்பாட்டை இப்பாடசாலையிலேயேதொடர்ந்துமேற்கொண்டுவந்தனர். இதன் விளைவாக 2013ம் ஆண்டுகா.பொ.த.சாதாரனதரத்தின் ஆங்கிலப்பிரிவில் 74மூ சித்தியைப் பெற்றுமாவட்டத்தில் முதல் நிலைக்கு இப்பாடசாலைவந்தது. அதேஆண்டுகணிதப் பாடத்தில் மாணவர்களின் சித்தியடைந்தநிலையும் 100மூ மானது.

அத்துடன் 2017ம் ஆண்டுநடைபெற்றகா.பொ.த.சாதாரணதரப் பரிட்சையில் மேற்படிபாடசாலைகணிதப்பாடத்தில் மாணவர்களின் சராரியின் அடிப்படையில் மாவட்டத்தில் முதல்நிலையைப் பெற்றது. இம் மாணவர்களின் கல்விமுயற்சியைவளர்க்க இக் கிராமத்தின் ஆலயசபையினர் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் ஆகியபாடங்களில் கற்பித்தலில் சிறப்பானஆசிரியர்களைக் கொண்டுமேலதியகல்வியையும் வழங்கிவருகின்றனர். இதற்காகமாதம் ஒன்றுக்கு 60000.00 ரூபாய்க்குமேற்பட்டபணத்தையும் இம் மாணவர்களுக்காகசெலவு செய்துவருகின்றனர்.

2017ம் ஆண்டுகா.பொ.த.சாதாரணதரப் பரிட்சையில் 9யு சித்தியைஒருமாணவன் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ் வளர்ச்சியினால் வெளி இடங்களுக்குகற்றல் செயற்பாட்டுக்கு சென்றமாணவர்கள் பலர் மீண்டும் தமதுசொந்தபாடசாலையில் கல்விகற்கும் ஆர்வத்துக்குஉள்ளாக்கப்பட்டு இப் பாடசாலையில் மீண்டும் இணைந்து கொண்டனர். இப் பாடசாலையில் கல்விவளர்ச்சியைஅறிந்தஅதிபர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வித்திணைக்களம் இக்கிராமமக்களின் வேண்டுகோளுக்கு இனங்க  2018ம் ஆண்டுஊயர்தரத்தின் கலைப்பிரிவை இங்குஆரம்பித்தனர்.
இவ்வாறுவளர்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த பாடசாலையில் கடந்த 2018ம் ஆண்டு வைகாசி மாதத்துடன் இங்குகணிதப் பாடம் கல்விகற்பித்தஆசிரியர் மாற்றமாகி சென்று விட்டார்.

இவருடைய இடத்தைநிரப்ப இதுவரையில் எந்தஆசிரியரும் கணிதப் பாடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படாமைமாணவர்களையும் பெற்றோரையும் அச்சமடையச் செய்துள்ளது. மீண்டும் எமதுகிராமமும் பாடசாலையும் ஆரம்பநிலைக்குசென்றுவிடுமோஎன்கின்றஎண்ணமும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடந்தஒருவருடங்களுக்குமேலாகசித்திரப்பாடஆசிரியரும் இங்கு இல்லாமைமாணவர்களின் வளர்ச்சியில் தளர்வைஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் அரசவேலைஒன்றைப்பெறவேண்டுமாக இருந்தால் அதில் முக்கியமாககுறிப்பிடப்படுகின்றவிடம் கா.பொ.த.சா.தரத்தில் கணிதம் ஆங்கிலம் விஞ்ஞானம் ஆகியபாடங்களில் முதல் தடவையிலேயே திறமைச்சித்திபெறவேண்டும் என்பதாகும்.

இப்பருவத்தில் மாணவர்களுக்குகிடைக்க வேண்டியகல்விச்செயற்பாடானது பொருத்தமான காலப்பகுதியில் கிடைக்காமையானது மாணவர்களில் எதிர்காலவாழ்விலும் அதிக தாக்கம் செலுத்துவதினைஉணரக்கூடியதாகஉள்ளது. இதனை திறமைச்சித்தியில்லாமல் வேலைவாய்ப்பிற்கானமடலைஅனுப்பமுடியாமல் தவிக்கும் இளைஞர்களிடமிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். ஒருபாடத்துக்குரியஆசிரியரைமாற்றும்பொழுதுஅதற்குபதிலானஆசிரியரைநியமித்துவிட்டுமாற்றத்தைவழங்குவதுசிறந்ததாகும்.
எனவேபாடசாலைசமூகத்துடன் தொடர்புடையவலயக்கல்விப்பணிமனைபாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் இதனைக் கவணத்தில் எடுத்து இப்பாடசாலைமாணவர்களின் தேவையினைபூர்த்திசெய்யுமாறுகேட்டுக் கொள்ளுகின்றோம். இந்நிலை தொடர்ச்சியாககிராமங்களில் காணப்படுமாக இருந்தால் பலகிராமங்களில் பாடசாலை இருந்தும்மாணவர்களைகாணமுடியாத சூழ்நிலைஏற்படும். நகர்புறபாடசாலைகள் மட்டுமே வளர்ச்சி பெறும்.எனவேதயவுசெய்து இதில் கவணம் செலுத்திவளர்ச்சியடைந்துவரும் இப்பாடசாலைக்கு ஆசிரியர்களைவழங்கிவைக்குமாறு கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-பாரி-

மன்னாரில் 2017ம் ஆண்டுகா.பொ.த.சாதாரனதர கணிதப்பிரிவில் முதல் நிலை பெற்ற தலைமன்னார் புனித லோறன்சியார் பாடசாலையில் கணிதஆசிரியர் இல்லை... Reviewed by Author on February 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.