அண்மைய செய்திகள்

recent
-

மனித முக அமைப்பில் 3டி முகமூடிகள்! அரிய கண்டுபிடிப்பு -


ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 3டி வடிவமைப்பில் தயாரித்துள்ள மனித முக அமைப்பின் முகமூடிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
மனித முக வடிவமைப்பை சற்றும் மாறாத வகையில் ஜப்பானைச் சேர்ந்த ரியல்-எப் என்ற நிறுவனம் 3டி முகமூடிகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த 3டி முகமூடிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த 3டி முகமூடிகளை தயாரித்த ரியல்-எப் நிறுவனத்தின் உரிமையாளர் ஒசாமு கிட்டகாவா கூறுகையில், ‘இதுவரை செயற்கை முகவடிவ முகமூடிகள் 2டியில் மட்டுமே உள்ளன. இதற்கு போதிய தொழில்நுட்பம் இல்லாததே காரணம் ஆகும். செயற்கை முகமூடிகள் வடிவமைப்பில் 3டி மிகவும் சவாலான ஒன்றாகும்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விளம்பர நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 3டி முகமூடிகள் விளம்பரத்திற்கும், மார்க்கெட்டிங் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இசை விழாக்கள் போன்றவற்றில் இசையமைப்பாளர்கள் இதனை உபயோகிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர்.
இந்த முகமூடிகள் முகஅமைப்பு மறுபயன்பாட்டு தொழில்நுட்பத்தின் சமீபத்திய தயாரிப்பாகும். இதேபோல் கார் தயாரிப்பாளர்களும் 3டி முகமூடிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த 3டி முகமூடிகளை மென்பொருளுடன் இணைப்பதன் மூலம் ஓட்டுநர் உறங்கிக் கொண்டிருக்கிறாரா என்பது துல்லியமாக தெரிகிறது.
இவை சில வாரங்களிலேயே உருவாக்கப்படுகின்றன. முதலில் முகம் 3டி ஸ்கேனில் பதிவிடப்படுகிறது. பின்னர் புகைப்படம் எடுக்கப்பட்டு, இவை இரண்டையும் கம்ப்யூட்டரில் மென்பொருள் மூலம் இணைத்து இந்த முகமூடிகளுக்கான வடிவம் இறுதி செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் முக அமைப்பின் மீது 2டி புகைப்படம் பொருத்தப்படும். இது உறுதியான பிளாஸ்டிக் கொண்டு செய்யப்படுவதால் அசைக்க முடியாததாகும். 3டி பிரிண்டரில் பிரிண்டிங் செய்யப்படுகிறது.
இந்த 3டி பிரிண்டர்களில் சில சிரமங்கள் ஏற்படும்போது முகமூடிகள் கைகள் கொண்டு நுணுக்கமாக வரையப்படுகிறது. இதுபோன்ற முகமூடிகள் மருத்துவத்துறையிலும், மனித உருவில் உருவாகும் ரோபோக்களுக்கு பொருத்தவும் பயன்படுத்தப்படுகின்றன’ என தெரிவித்துள்ளார்.


மனித முக அமைப்பில் 3டி முகமூடிகள்! அரிய கண்டுபிடிப்பு - Reviewed by Author on February 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.