அண்மைய செய்திகள்

recent
-

உதயமாகியது மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் "பிரித்தானியா பழைய மாணவர் சங்கம் -Photos)

மன்னார் மாவட்டத்தின் பிரபல்யமான தேசிய பாடசாலைகளின் ஒன்றான சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி யின் பிரித்தானியாவில் வசிக்கும் பழைய மாணவர்கள் ஒன்று சேர்த்து பழைய மாணவர் சங்கம் ஒன்றை உருவாக்கி உள்ளனர் 

பிரித்தானிய Milton keynes  எனும் இடத்தில் சனிக்கிழமை  (23-02-2019) அன்று பழைய மாணவர் சங்க கூட்டம் நடைபெற்று முதலாவது பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அந்த வகையில்

  • தலைவராக திரு கனகரத்தினம் சதீஸ்குமார்
  • உப தலைவராக திரு முத்துலிங்கம் விஜிதன்
  • செயலாளராக திருமதி சிவதர்சினி கஜேந்திரன்
  • உப செயலாளராக திருமதி சிவதர்சினி ராகுலன்
  • பொருளாளராக திரு சிவராஜ் பற்குணராசா வும் இன்று தெரிவு செய்யப்பட்டனர்.


தொடர்ந்து ஒவ்வோரு ஆண்டு பழைய மாணவர்களில் இருந்தும் தலா ஒவ்வொருவர் பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்களாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் ஒன்றுகூடல் அன்று தெரிவுசெய்வது என தீர்மானிக்கப்பட்டது.

அதுவரை மேலே குறிப்பிட்டநிர்வாகத்தினர்  சங்கத்தை வழிநடத்துவர்.தொடர்ந்தும் ஏனை பிற நாடுகளில் இருந்தும் தலா ஒவ்வொருவரை அந்தந்த நாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக இணைத்து எமது பழைய மாணவர் சங்க செயற்பாடுகள் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்பட  தீர்மானிக்கப்பட்டது

இச் சங்கமானது மன்னார் சித்திவிநாயகர் கல்லூரியில்  கல்விகற்ற முத்துக்களால்  புலம்பெயந்த மண்ணில் உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம்  என்று வராலாற்றில் தடம் பதிக்கிறது

படங்கள்- சமிதன்




























உதயமாகியது மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் "பிரித்தானியா பழைய மாணவர் சங்கம் -Photos) Reviewed by Admin on February 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.