அண்மைய செய்திகள்

recent
-

இரத்தத்தில் உள்ள கிருமிகளை விரட்ட வேண்டுமா?


ஆயுர்வேதம் அமிழ்தவள்ளி (Tinospora Cordifolia) என்கிற அமிர்த மூலிகையும் (Giloy herb) பிளேலெட்களின் எண்ணிக்கை கூட்டும் வல்லமை பெற்றவை என்று கூறுகிறது.
இந்த மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு ஒவ்வாமை போன்ற பிணிகளில் இருந்து பெரிய நிவாரணத்தை தருகிறது.
இந்த மூலிகையின் வேரில் இருந்து தான் சாறைப் பிழிந்து பருக வேண்டும். தற்போது அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
  • சுமார் 4 செ.மீ நீளமுள்ள 4 முதல் 5 அமிழ்தவள்ளி வேர்கள்
  • 4 முதல் 5 துளசி இலைகள்
  • 2 முதல் 3 டம்பளர் தண்ணீர்
செய்முறை
இரவில் அமிழ்வள்ளி வேரை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரோடு துளசி இலைகளை கிள்ளி போட்டு 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் விட்டு அந்த மூலிகை நீரை கொதிக்க விடவேண்டும்.
மூலிகை வேர் நீர் பதியாக வற்றும் வரை கொதிக்க விடவேண்டும்.
பிறகு அந்த வேர் நீரை குளிர வைத்து நாளைக்கு 2 அல்லது 3 முறை அருந்த வேண்டும்.
இந்த பானத்தை குடிப்பதனால் இரத்தத்தில் உள்ள மேக்ரோஃபேஜஸை வலிமையாக்கி வெளியில் இருந்து தொற்றுக்களை ஏற்படுத்தும் கிருமிகளை தடுக்கிறது.

இரத்தத்தில் உள்ள கிருமிகளை விரட்ட வேண்டுமா? Reviewed by Author on February 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.